தேவனை குறித்து நிச்சயமுடையவர்களாயிருங்கள் Jeffersonville, Indiana, USA 59-0125 1இது இவ்வாறு கூறுகிறது: கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பினனாகிய எலியா ஆகாபை நோக்கி, என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனை கொண்டு சொல்லுகிறேன் என்றான். பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்; நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு, அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று. அப்போது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்; நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு: உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிடுவேன் என்றார். அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்: அந்தப் பட்டணத்தின் ஒலிமுக வாசலுக்கு அவன் வந்த போது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள்: அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டு வா என்றான். கொண்டு வர அவள் போகிற போது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்கு கொண்டு வா என்றான். அதற்கு அவள்; பானையிலே ஒருபிடி மாவும் கலத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றான். அப்போது எலியா அவளைப் பார்த்து, பயப்படாதே, நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து. ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப்பண்ணி என்னிடத்தில் கொண்டு வா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மாவும் செலவழிந்து போவதும் இல்லை: கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள். கர்த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே பானையிலே மாவு செலவழிந்து போகவும் இல்லை, கலசத்திலே எண்ணெய் குறைந்து போகவும் இல்லை. 1.இரா.17:1-16 2வெளிநாடு செல்வதற்கு முன்பு, இன்று காலை பேசுவதற்காக நான் தெரிந்து கொண்ட பொருள்: தேவனை குறித்து நிச்சயமுடையவர்களாயிருங்கள் என்பதாகும். இப்பொழுதும் கர்த்தாவே, உம்முடைய வார்த்தை புறப்பட்டுச் செல்லும் போது அதை ஆசிர்வதிப்பீராக. அவர் வரும்படியாக நாங்கள் அழைத்தபடியினால், பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் சிந்தைகளையும் எண்ணங்களையும் ஆட்கொண்டு, அவருடைய விஜயத்துக்கு எங்களை ஆயத்தப்படுத்துவாராக. நாங்கள் காணப்படுவதற்கோ அல்லது நாங்கள் காண்பதற்கோ கர்த்தருடைய வீட்டுக்கு வரவில்லை, ஆனால் உம்மைக் குறித்து பற்றுக்கொள்ளவும், வாழ்க்கையின் பிரச்சனைகளை நாங்கள் மிகுந்த உறுதியுடன் சந்தித்து தேவனை குறித்து நிச்சயமுடையவர்களாயிருக்க, உம்முடைய தன்மையையும், உமது வழியையும், உமது காரணங்களையும் அறிந்து கொள்ளவுமே நாங்கள் வந்திருக்கிறோம். கர்த்தாவே, இதை அருள்வீராக. இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 3அது ஒரு பயங்கரமான காலை வேளையாக இருந்திருக்க வேண்டும். அது மிகவும் வெப்பமாயும், தூசு நிறைந்ததாகவும் இருந்தது. ஜனங்கள் தெருவில் பட்டினி கிடந்தனர். பூமி மிகவும் வெப்பமடைந்து எரிந்து போக ஆயத்தமாயிருந்தது, இவை அனைத்தும் ஜனங்களின் பாவங்களினாலும், அவர்களின் ஒழுக்கக் கேட்டினாலும் விளைந்தவையாம். பாருங்கள், ஆகாப் ராஜா அந்த சமயத்தில் இஸ்ரவேலில் இஸ்ரவேல் ஜனங்களின் மீது ஆட்சி புரிந்து கொண்டிருந்தான், அவன் இஸ்ரவேல் ராஜாக்கள் அனைவரிலும் மிக துன்மார்கமானவன். ஆகாபைப் போன்ற பொல்லாங்கான ராஜா இருந்ததேயில்லை, அவன் கற்பிக்கப்பட்டு நன்கு அறிந்திருந்த போதிலும், அவன் புரிந்த எல்லாவற்றிலும் தேவனை அதிருப்திபடுத்தாமல் இருந்ததில்லை. அவனுக்கு ஒரு பெரிய இராணுவ முறைமை இருந்தது, அவனுடைய அரசாட்சியின் கீழ் ஜனங்கள் மிகுந்த செழிப்படைந்தனர். இருப்பினும், நீங்கள் தேவனுக்கு அதிருப்தியையுண்டாக்கி, நீண்ட காலம் அப்படியே இருந்து விடலாம் என்று எதிர் பார்க்க முடியாது. 4பிறகு, அவனுடைய விவாக விஷயத்தில், தன் சொந்த ஜனங்களின் மத்தியில் பெண் கொண்டு அவன் விவாகம் செய்யாமல், அவன் சென்று ஒரு பாவியை - விக்கிரகாராதனைக்காரியை, விக்கிரத்தை வணங்குபவளை விவாகம் செய்து கொண்டான், அவன் யேசபேலை மணந்தான். அவள் ஒரு விசுவாசியல்ல. எந்த ஒரு விசுவாசியும் ஒரு அவிசுவாசியை எக்காரணத்தைக் கொண்டும் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. எப்பொழுதுமே விசுவாசியை மணந்து கொள்ள வேண்டும். ஆனால் ஆகாபோ இப்பொல்லாங்கான செயலை புரிந்தான். யேசபேல் ஒரு அழகான பெண் என்பதில் ஐயமில்லை. அவளுடைய அழகைக் கண்டு மயங்கினானேயன்றி, அவளுடைய உண்மையான தன்மையைக் கண்டல்ல. அது, இந்நாள் வரை அநேகர் அத்தவறை செய்து வந்துள்ளனர். அவள் தேசத்தில் ஜனங்களிடையே விக்கிரகாராதனையைக் கொணர்ந்தாள். ஜனங்கள், ஆசாரியர்கள், போதகர்கள் இவ்வனைவருமே மக்களால் பொதுவாக விரும்பி உரிமை கோரப்படும் (Popular demand) இந்த செயலுக்கு இரையாயினர். 5இன்றைய நமது நாட்டின் நிலையும் அதுவே. நாமும் மக்களால் பொதுவாக விரும்பி உரிமை கோரப்படும் செயலுக்கு இரையாகியுள்ளோம். அவர்களுடைய அரசாங்கம் அதை ஆமோதிப்பதனால் அது சரியென்று ஆசாரியர்கள் எண்ணினர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அரசாங்கம் ஆமோதிப்பதினால் எனக்குக் கவலையில்லை, அது தேவன் ஆமோதிப்பதாயிருக்க வேண்டும். உலக காரியங்கள் சிலவற்றில் ஈடுபடுவதனால் பரவாயில்லையென்று ஜனங்கள் எண்ணினர். இன்றைய நிலையை அது சித்தரிக்கின்றது என்று நான் இப்பொழுது கூறினதை நான் விவரிக்க வேண்டுமென்று யாராகிலும் கேட்கக்கூடும். நாம் விக்கிரக வழிபாட்டினர் அல்லவென்று நாம் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் விக்கிரக வழிபாட்டினரே. அரசாங்கமும் அதை ஆமோதிக்கின்றது. இன்று ஜனங்கள் விக்கிரக வழிபாட்டினராயுள்ளனர். ஏனெனில் அவர்கள் விக்கிரகங்களை வணங்குகின்றனர். சிலர் சினிமா நட்சத்திரங்களை விக்கிரகங்களாக வணங்குகின்றனர். வேறு சிலர் பணத்தை விக்கிரகங்களாக வணங்குகின்றனர். மற்றும் சிலர் தொலைகாட்சி நட்சத்திரங்களை விக்கிரகங்களாக வணங்குகின்றனர். தேவனுக்கு மேலாக நீங்கள் வைப்பது அனைத்தும், அது எதுவாகயிருப்பினும், விக்கிரகமே. 6நமது மகத்தான எதிரியாளியாகிய சாத்தானும் மிகவும் சாமர்த்தியமுள்ளவனானதால், சில சமங்களில் சபையை தேவனுக்கு மேலாக வைத்து விடுகிறான். உங்களுக்கு ஒரு பெரிய சபை இருக்கலாம். அது ஒரு பெரிய கட்டிடமாகவோ, அல்லது பெரிய ஸ்தாபனமாகவோ, அல்லது மிகுந்த அங்கத்தினர்கள் கொண்ட சபையோராகவோ இருக்கலாம். ஆனால் எதுவுமே தேவனுக்கு மேலாக உங்கள் இருதயத்தில் காணப்பட வேண்டாம். தேவனுக்கு மேலாக உள்ள எதுவுமே விக்கிரகமாகும். மற்ற ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்தது போல் இவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாக இல்லையென்பதை இந்த இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்திருந்தனர். அவர்கள் மதசார்புள்ள ஒரு தேசமாக உள்ளபடியால் எல்லாமே சரியாயிருக்கும் என்று அவர்கள் எண்ணினர், அது போன்றே நாமும் அந்த நிலையை அடைந்துள்ளோம். 7சில மாதங்களுக்கு முன்பு, எனக்கு மிகவும் அருமையான நண்பர் ஒருவருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர், ''சகோ. பிரான்ஹாமே, நீர் அமெரிக்க ஐக்கிய நாடுகளை அதிகமாக மட்டந்தட்டி விடுகிறீர். நீர் எப்போழுதுமே பாவத்தை எடுத்துரைத்து கெர்ச்சித்து, தேவன் எவ்வாறு இந்த தேசத்தை தண்டிக்கப் போகிறார் என்று கூறி வருகிறீர்“ என்றார். நான், “அவர் நீதியுள்ளவராதலால் அதை செய்தே ஆக வேண்டும்” என்றேன். அவர், “ஆனால் சகோ. பிரான்ஹாமே, இந்த தேசம் வேதத்தின் மேல் அஸ்திபாரப்படுத்தப்பட்டது என்றும், நமது முற்பிதாக்கள் இங்கு வந்து குடியேறி. தேவன் நமக்கு இந்த சுதந்தரத்தை அருளினார் என்றும், நாம் மதசார்பு கொண்டுள்ள ஒரு தேசம் என்பதையும் நீர் மறந்து விடுகிறீர்” என்றார். நான், “அவையனைத்தும் உண்மையே. இந்த தேசத்தை நான் எவ்வளவாக பாராட்டுகிறேன் என்பதை யாரும் அறிவதில்லை, ஆனால், பாருங்கள், என் சகோதரனே, இஸ்ரவேல் தேசமும் கூட தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு தேசமாயிருந்தது. அவர் அதனிடம் தீர்க்கதரிசிகளையும் பெரிய மனிதர்களையும் அனுப்பினார், ஆனால் தேவனுக்கோ பாவத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இஸ்ரவேல் விதைத்த ஒவ்வொரு தானியத்தையும் அது அறுக்கும்படி அவர் செய்வார், அவர் மனிதரிடம் பட்சபாதமுள்ளவர் அல்ல” என்றேன். 8நமது முற்பிதாக்கள் செய்ததில், நமது சபைகளின் ஸ்தாபகர்கள் செய்த தியாகத்தின் பேரில் நாம் சார்ந்துள்ளபடியால் எல்லாம் சரியாயுள்ளது என்று எண்ணும் நிலைக்கு நாம் வந்துள்ளோம். அது மிகவும் நல்லது. அது பாராட்டுதற்குரியதே. ஆனால் அவர்கள் செய்ததின் பேரில் நாம் இரட்சிப்பை அடைந்து விட முடியாது. இரட்சிப்பு என்பது தனிப்பட்டோரின் விவகாராம். அது தனிப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தேவனுக்குமிடையேயுள்ள ஒன்றாகும். அது ஒட்டு மொத்தமாக நமது தேசத்துக்கும், அல்லது நமது சபைக்கும் தேவனுக்குமிடையேயுள்ள ஒன்றல்ல. நாம் தனிப்பட்ட விதத்தில் தேவனுக்கு முன்பாக பதில் கூற வேண்டியவர்களாயிருக்கிறோம். நமது தேசத்தில் மிகுந்த ஆவிக்குரிய ஜனங்களினிடையேயும் கூட நீங்கள் ஆவிக்குரிய மனிதர்களிடமும் ஸ்திரீகளிடமும் செல்வீர்களானால், அவர்களுடைய இருதயத்தில் ஏதோ ஒன்று குறைவுள்ளதாயிருப்பதை நீங்கள் காணலாம். 9நாங்கள்... கடந்த சில வாரங்களாக இந்த சில காரியங்களை நான் கண்டு வருகிறேன். எந்த மனிதர்களுக்குள் ஆத்துமா உள்ளதாக நான் நினைத்து வந்தேனோ, அவர்கள் உலகப் பிரகாரமான காரியங்களில் முக்கியத்துவம் செலுத்தி, “தேவன் எனக்கு மிகப் பெரிய இன்னின்னதை கொடுத்திருக்கிறார்” என்று கூறி வருகின்றனர். நீங்கள் பொய் சொல்லுகின்றீர்கள்! பெரிய உலகப் பிரகாரமான சொத்துக்கள் எப்போதுமே தேவனுடைய சித்தத்தை சார்ந்திருப்பதில்லை. தேவன் நீதியள்ளவர் மேலும் அநீதியுள்ளவர் மேலும் மழையை பொழிகின்றார். இன்று உலகத்துக்கு தேவையானது பொய்யான விசுவாமல்ல, ஏதோ ஒரு பொய்யைச் சொல்லி உங்களையே ஏமாற்றிக் கொண்டு, அது ஆவிக்குரியது என்று அழைப்பதல்ல. 10சில சமயங்களில் விசுவாசமானது பெரிய அற்புதங்களை நடப்பிக்க கூடும். “அந்நாளில் அநேகர் என்னிடத்தில் வந்து, உமது நாமத்தினாலே நான் இதை செய்யவில்லையா, அதை செய்யவில்லையா'' என்பார்கள். நான் அவர்களை நோக்கி, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று அறிக்கை செய்வேன்” என்று நமதாண்டவர் கூறவில்லையா? (மத்.7:21-23). அக்கிரமம் என்பது என்ன? நீங்கள் சரியாக ஒரு காரியத்தை செய்ய அறிந்திருந்தும் அதை செய்யாமலிருப்பதே. “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை,'' அந்த நாளில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு நமக்குத் தேவையானது அதிகமான உலகப் பிரகாரமான சொத்துக்கள் அல்ல; அதை நாம் பெற்றுள்ளோம். நமக்கு பெரிய ஆலயங்கள் அவசியமில்லை, நமக்கு அதிக அங்கத்தினர்களை கொண்ட சபையோர் அவசியமில்லை. நமக்கு வானொலியிலும் தொலை காட்சியிலும் அதிகமான பிரச்சாரங்கள் அவசியமில்லை. இத்தகைய காரியங்கள் எதுவுமே நமக்கு அதிகமாக அவசியமில்லை. இன்றைக்கு ஆவிக்குரிய பிரகாரமாக இருக்க நமக்கு தேவை என்னவெனில், ஒரு மனிதன் தன்னிடம் ஒரு காசும் இல்லாத அளவுக்கு ஏழ்மையாயிருந்த போதிலும், தன்னை தேவனுக்கு முன்பாக தாழ்த்தி, அவனுக்குள் இருக்கும் ஆவி தேவனுடைய நன்மையினால் திருப்தியாகி, உள்ளில் அவனுடைய இருதயத்தில் ஒரு எழுப்புதல் ஏற்பட்டு, அவனுடைய சுபாவத்திலும் அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் மாறுதல் ஏற்படும் வரைக்கும் ஜெபம் செய்தலேயாம். 11உங்கள் பாதங்களில் ஒரு ஜோடு காலணிகள் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் கந்தை உடுத்தியிருக்கலாம். ஆனால் உங்கள் இருதயத்திலுள்ள ஏதோ ஒன்று தேவனுடைய பாடல்களை பாடிக் கொண்டிருக்கலாம். இவ்வுலகிலுள்ள செல்வம் அனைத்தைக் காட்டிலும் நான் அதையே பெற விரும்புகிறேன். எனவே உலக காரியங்களைப் பெற்றிருத்தல் தேவனுடைய ஆசிர்வாதத்தின் அடையாளம் என்று நீங்கள் சொல்லிவிட முடியாது. தாவீது கர்த்தரிடம், கொடிய பலவந்தனான துன்மார்க்கன் பச்சை மரத்தை போல் தழைத்துள்ளதைக் கண்டதாக முறையிட்டான். ஆனால் தேவன் அவனிடம், “அவனுடைய முடிவை நீ எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?'' என்று கேட்டார். நாம் எவ்வளவு நல்ல உடைகள் உடுத்தாலும், நமக்கு உண்ண எவ்வளவு அதிகமான உணவு இருந்தாலும், அது தேவனுடைய சமூகத்தில் செல்வது கிடையாது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சரீரத்தை எவ்வளவாக பேணிப் பாதுகாத்தாலும், அது அழிந்து போகின்றது. மனிதனுக்குள் இருக்கும் ஆத்துமாவே முக்கியம் வாய்ந்தது. நமது ஆவி அடைந்துள்ள நிலையை அது பொறுத்தது. அதுவே ஜீவனுள்ள தேவனுடைய சமூகத்திற்கு செல்கின்றது. 12ஆனால் நாமோ எல்லாம் சரியாயுள்ளதாக முடிவு செய்து விடுகின்றோம். நாம் நினைக்கிறோம், நாம் கிறிஸ்தவ தேசமாக உள்ள காரணத்தால்.... அப்படித்தான் ஆகாபும் இஸ்ரவேலர் அனைவரும் எல்லாம் சரியாயுள்ளது என்று முடிவு செய்திருந்தனர். அவர்களுடைய ஆசாரியர்களும் போதகர்களும், “எல்லாமே சரியாயுள்ளது, எல்லாமே அருமையாயுள்ளது” என்று அவர்களிடம் கூறிவந்தனர். ஆனால் அவர்களுக்கு ஒருவன் இருந்தான். அவன் தவறான செயல்களுக்கு விரோதமாக கூக்குரலிட்டான். ஏனெனில் இந்த ஒருவன், பரிசுத்தமுள்ள தேவன் நவீன போக்காகிய பரிசுத்தமற்ற மார்க்கத்தின் பேரில் திருப்தி கொள்ள முடியாது என்பதை அறிந்திருந்தான். பரலோகத்தின் தேவன் இன்றைக்கும் மாறாதவராக அவ்வாறே உள்ளார். நமது முயற்சிகள் அனைத்திலும், நாம் செய்ய முயலும் அனைத்திலும், அவருக்கு முன்பாக உள்ள பரிபூரணமான பரிசுத்த வாழ்க்கைக்கு வெளிப்புறத்தில் அவர் ஒரு போதும் பிரீதி கொள்ளமாட்டார். 13நாம் பள்ளிக் கூடங்களையும், ஆலயங்களையும், கூடாரங்களையும் கட்டலாம்: நமக்கு ஸ்தாபனங்கள் இருக்கலாம்: நாம் பெரிய காரியங்களைச் செய்யலாம். ஆயினும் மனித ஆத்துமா பரிசுத்தமடைந்து, தேவனுடைய பலிபீடத்தின் மேல் தேவனுடைய கிரியைகளுக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டாலெழிய தேவன் ஒருபோதும் பிரீதி கொள்வதில்லை. அப்படிப்பட்டவைகளை நீங்கள் இப்பொழுது காண்பதில்லை. நமது ஜெபக் கூட்டங்கள் பலவீனமடைந்துள்ளதை நீங்கள் காண்கிறீர்கள். ஒரு நிமிடம் ஜெபம் செய்து விட்டு, படுக்கையில் குதித்து விடுதல் போன்றவை. அது ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை நடக்கின்றது என்பதை நாம் காண்கிறோம். நாம் அனைவருமே குற்றவாளிகள்! நமது தேசம் ஒழுக்கம் குன்றி வருகின்றது. நமக்கு பில்லி கிரகாம்களும், ஓரல் ராபர்ட்டுகளும் எல்லாவிடங்களிலும் உள்ளனர். ஆனால் அமெரிக்காவை ஜீவனுள்ள தேவனிடம் மீண்டும் கொண்டு செல்வதற்கு அதன் இருதயத்தில் தாகம் எழும்பி, ஜீவனுள்ள அனுபவத்தைப் பெற்று, ஜீவனுள்ள தேவன் பேரில் என்றும் மரிக்காத விசுவாசத்தை கொள்ளாமல் போனால், நாம் நமது மூளையை சிதறடிக்கிறவர்களாயிருப்போம். 14நாம் மார்பை உந்தித் தள்ளி, கழுத்துப் பட்டையை திருப்பி அணிந்து கொண்டு, தெருவில் நடந்து, டாக்டர் அல்லது சங்கை போதகர் என்று அழைக்கப்பட விரும்பலாம். இந்நாட்டிலேயுள்ள மிகப்பெரிய சபைக்கு நாம் போதகராக இருக்கலாம். நமது வாழ்க்கையில் ஒருவன் தன் விரலைச் சுட்டிக் காட்டி குற்றப்படுத்தாத அளவுக்கு நாம் பக்தியுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் நமக்குள் இருக்கும் அந்த ஆத்துமா தேவனுக்காக பற்றியெரிந்து, அதில் காணப்படும் ஒன்று அவரை வாஞ்சித்து, ''மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல், ஓ தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது“ என்னும் அத்தகைய அனுபவத்தை நாம் அடையும் வரைக்கும்! எனவே, கம்யூனிஸம் போன்றவை, இப்பொழுது நடந்து கொண்டிருப்பது போன்று, வலுவடைந்து கொண்டே வரும். நம்மால் செய்ய முடிந்த ஒன்று சேருதல் அதை நிறுத்தப்போவதில்லை. அது வருமென்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேவனோ தமது சபையை அழைத்துக் கொண்டிருக்கிறார். 15இந்த சிறு ஸ்திரீ எலியாவுக்கு ஒத்த தன்மையைப் பெற்றிருக்க வேண்டும், ஏனெனில் வழக்கமாக உங்கள் கிரியை நீங்கள் யாரென்பதைக் காண்பிக்கின்றது. அவள் தேவனுடைய தீர்க்கதரிசியை உபசரிக்கும்படி தெரிந்து கொள்ளப்பட்டாள். அவள் ஒரு புறஜாதி, யூதகுலத்தைச் சேர்ந்தவள் அல்ல, என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நாடு எரிந்து கொண்டிருந்தது. இந்த ஸ்திரி, அந்த தன்மையைப் பெற்றவளாய், விசுவாசி என்னும் ரகத்தைச் சேர்ந்தவளாய்... தேவனுடைய தீர்க்கதரிசியை உபசரிக்க அவள் தகுதியற்றவளாய் இருந்திருந்தால், தேவன் அவளை இப்பணிக்கு அழைத்திருக்கவேமாட்டார். தகுதியற்ற ஒரு வீட்டுக்கு அவர் தமது தீர்க்கதரிசியை அனுப்பியிருக்கவேமாட்டார். அது எலியாவின் தெரிந்து கொள்ளுதல் அல்ல, அது தேவனின் தெரிந்து கொள்ளுதல். அது அவள் அவனுக்குக் கட்டளையிடுவதல்ல, அது தேவன் அவனுக்குக் கட்டளையிடுதல். அவன் ஆற்றண்டையில் வைக்கப்பட்டான்: காகங்கள் அவனைப் போஷித்து வந்தன. ஆனால் ஏதோ ஒன்று நடப்பதற்கு அது தேவனுடைய கட்டளையாயிருந்தது. எலியாவின் அதே தன்மையைப் பெற்றிருந்த விசுவாசியிடம் தேவன் நிச்சயமாக சென்றார். 16அவள் ஒரு விதவை. ஒரு விதவை, தன் கணவரை இழந்தவளாய், ஒரு சிறு பையனை வளர்க்க எவ்விதமான இன்னல்களை அனுபவித்திருப்பாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அங்கிருந்த நாடுகளில் அவர்கள் விளைச்சலின் பேரில் சார்ந்திருந்தனர். இன்று நமக்குள்ளது போல் அவர்களுக்கு சமூக நல திட்டங்கள் இருக்கவில்லை. அவர்கள் விளைச்சலின் பேரில் சார்ந்திருந்தனர். ஜனங்களின் அக்கிரமம் மிகுதியாகி அவர்களுடைய ஒழுக்கச் சிதைவு நாட்டில் பஞ்சத்தை வருவித்த காரணத்தால், அவர்கள் எல்லோரும் பட்டினியால் மரித்துக் கொண்டிருந்தனர். இந்த விதவை தன் பானையில் மாவு படிப்படியாக குறைந்து கொண்டு வந்ததை கண்ட போது, அவள் ஒவ்வொரு இரவும், இரவு முழுவதும் ஜெபித்தாள் என்பதில் ஐயமில்லை. பானையில் ஒரு கோப்பையளவு மாவும் கூட இல்லாத நிலையை அது அடைய வேண்டும். அவளிடம் இருந்ததெல்லாம் ஒரு சிறு கைப்பிடியளவு மாவு மாத்திரமே. மரணம் அவள் வாசலுக்குள் நுழைந்து, உள்ளே வந்து கொண்டிருந்தது. ஏனெனில் அதிகம் பெறுவதற்கு அவளுக்கு வேறு வழியேயில்லை. தேசம் முழுவதுமே பட்டினியால் வாடியது. எண்ணெயும் கலசத்தில் ஒரு கரண்டியளவு மாத்திரமே மீதமிருந்தது. இவ்வளவு எண்ணெயும், இவ்வளவு மாவும் அவளுக்கும் மரணத்துக்குமிடையே இருந்தது. அவள் மிகவும் ஊக்கமாக ஜெபித்திருப்பாள். உங்கள் வீட்டில் அப்படிப்பட்ட நிலை வரட்டும், நம் வாசலில் மரணம் காத்திருக்கிறது என்று நாம் அறிவோமானால், இன்று காலை நாம் உள்ளதைக் காட்டிலும் சற்று அதிகமான உத்தமத்துடன் காணப்படுவோம். 17இப்படி நாம் கற்பனை செய்து பார்க்கலாம்: அவள் இரவு முழுவதும் ஜெபித்தாள். இன்னும் ஒரு நாளில் அவள் வாழ்க்கை முடிந்து விடும். அவள் மூன்று அல்லது நான்கு வயது கொண்ட தன் சிறு மகனின் வெளுத்த உதடுகளைக் கண்டாள். அவளுடைய எலும்புகளின் மேலுள்ள மாமிசம் மறைந்து போய், எலும்புகளும் தேய்ந்து கொண்டு வந்தன. இப்படிப்பட்டவை சம்பவிப்பதைக் காண்பது ஒரு தாய்க்கு பயங்கரமான காரியமாக இருக்கலாம். இருப்பினும் அவள் தேவனுக்கு முன்பாக தன் கரங்களை கூப்பி, இரவும் பகலும் ஜெபித்துக் கொண்டிருந்தாள். “இப்பொழுது நாம் ஒரு கைப்பிடியளவு மாவுக்கும், ஒரு கரண்டியளவு எண்ணெய்க்கும் வந்து விட்டோம்.'' உங்களுக்கு தெரியுமா, அது விசித்திரமான செயல். நான் மறுபடியும் பிரசங்கிப்பதை நீங்கள் கேட்காத நிலை ஏற்படுமானால், இதை தேவன் உங்கள் ஒவ்வொருவருடைய இருதயத்திலும் பதித்தருள்வாராக. இது ஒரு செய்தியாயிருக்கட்டும். தேவன் சில நேரங்களில் இப்படியாக காரியங்களை செய்வதென்பது விசித்திரமானது, மிகவும் விசித்திரமானது. 18நமது பாவங்களை நாம் அறிக்கையிட்டு தேவன் நம்மிடம் எதிர் பார்க்கும் ஒவ்வொரு தேவையையும் (requirement) நாம் நிறைவேற்றி முடித்த பின்பு... நாம் தேவனை விசுவாசித்தோம். ஒரு சூழ்நிலை சந்திக்கப்பட வேண்டும், அது அவருடைய சித்தத்துக்கு ஏற்றதாய் உள்ளது. நமது பாவங்களை நாம் அறிக்கையிட்டு, நாம் செய்த தவறுகள் அனைத்தையும் சரிபடுத்தி, நமக்குத் தெரிந்த அனைத்தையும் நாம் செய்து, தேவன் நம்மிடம் கேட்கும் எல்லா தேவைகளையும் நாம் செய்து நிறைவேற்றின பின்பும், அவர் மெளனமாயிருக்கிறார். அவர் நமக்கு உத்தரவு அருளுவதில்லை. அத்தகைய நிலையையடைந்துள்ள ஜனங்களிடம் இன்று காலை நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். நானும் கூட அநேக முறை அந்நிலையையடைந்திருக்கிறேன். என் வாழ்க்கையை நான் ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்து, நான் ஏதாவது தவறு செய்து விட்டேன் என்று காணும் போது, அதை நான் அறிக்கை செய்து, “தேவனாகிய கர்த்தாவே, அதை நான் சரி செய்து விடுகிறேன்” என்று கூறிச்சென்று அப்படியே செய்வேன். மறுபடியுமாக அவரிடம் வந்து, “கர்த்தாவே, நீரே தேவன்; நீர் இப்பொழுது பதிலளிப்பீர். நான் செய்ய வேண்டுமென்று நீர் எதிர் பார்த்த ஒவ்வொன்றையும் நான் செய்து முடித்து விட்டேன், உமது தேவைகள் அனைத்தையும் நான் சந்தித்து விட்டேன்” என்பேன். அப்பொழுதும் அவர் அசையாமல், மௌனமாயிருப்பார். அப்படிப்பட்ட நேரத்தில் தான் அவர் தேவன் என்னும் நிச்சயத்தை நீங்கள் கொண்டிருத்தல் அவசியம். நீங்கள் அதைரியப்பட வேண்டாம். ஒரே ஒரு காரியம் என்னவெனில், உங்கள் இருதயத்தில் தேவனைக் குறித்து நீங்கள் நிச்சயமுடையவர்களாயிருக்க வேண்டும். 19நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த பொருள், நீங்கள் எதையும் செய்வதற்கு முன்பு அந்த நிச்சயத்தையுடையவர்களாய் இருக்க வேண்டும். உங்கள் இருதயத்தில் அவர் தேவன் என்னும் நிச்சயத்தைப் பெற்றிருங்கள். அவர் கூறின் ஒவ்வொன்றையும் நீங்கள் செய்து நிறைவேற்றின பின்பு, அவர் தேவன் என்னும் நிச்சயத்தை பெற்ற பிறகு, அப்பொழுது தான் விசுவாசம் அந்த இடத்திலேயே கிரியை செய்யத் தொடங்குகிறது, விசுவாசம் நிலையாக நிற்கிறது, ஏனெனில் தேவன் உண்டு என்பதை அது அறிந்திருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு தேவையையும் சந்தித்து விட்டீர்கள். அவர் உண்டு என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அப்பொழுது விசுவாசம் நிலையாக நிற்கிறது. ஓ, அவருடைய நாமம் துதிக்கப்படுவதாக விசுவாசம் அசைவதில்லை. ஏனெனில் தேவன் உண்டென்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் அது உறுதியாக அறிந்துள்ளது. (எபி. 11:6). பிரன்ஹான் கூடாரமே, இது உங்களுக்குள் ஆழமாக பதிந்து, உங்களை விட்டு எடுபடாதிருப்பதாக. நீங்கள் தேவனுடைய தேவையை சந்தித்து, உங்கள் இருதயத்தில் அவர் உண்டு என்று விசுவாசிப்பீர்களானால், தேவன் உங்கள் விசுவாசத்தை சோதிக்க மாத்திரமே செய்கிறார்; ஏனெனில் அப்படிச் செய்ய அவர் பிரியப்படுகிறார். நீங்கள் உங்கள் பாவத்தை அறிக்கையிட்டு, தேவனுக்கு தேவையான ஒவ்வொரு தேவையையும் நீங்கள் சந்தித்த பிறகும் அவர் மெளனமாயிருப்பாரானால், அவர் உண்டு என்று விசுவாசம் கூறுகிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இதெல்லாம் என்னவென்று, ஒன்றுமே அறியாமல் விசுவாசம் அதை இறுகப்பற்றிக் கொள்கிறது. ஆனால் அவர் உண்டு என்பதை அது அறிந்துள்ளது. அவர் உண்டு என்னும் உறுதியை அது கொண்டுள்ளது. 20ஞாபகம் கொள்ளுங்கள், அவர் உண்டென்றால், அவருடைய வார்த்தை உண்மையாயிருக்க வேண்டும். இந்த சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்று அவர் கேட்டு, நீங்கள் அப்படி செய்தால், அவர் தமது வார்த்தையைக் கவனித்துக் கொள்ளக் கடமைப்பட்டவராயிருக்கிறார். நீங்கள் பின் விலகிப்போய், “நான் சுகமடையவில்லை. நான்...” என்று சொல்லாதீர்கள். ஓ, எளிய பலவீனமுள்ள விசுவாசங்கொண்டவர்களே அதை நம்ப வேண்டாம். எல்லாமே அறிக்கை செய்யப்பட்டு, எல்லாமே வெளியரங்கமாகி, நீங்கள் தேவனுடைய தேவையை சந்தித்திருப்பீர்களானால், விசுவாசம் அங்கேயே நிலை நிற்கிறது. எதுவுமே அதை அசைக்க முடியாது, அவர் உண்டென்று நீங்கள் உறுதி கொள்கிறீர்கள். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்.” (ஏசா.40:31). அவருடைய தேவைகளை நீங்கள் சந்தித்த பிறகு, காத்திருங்கள்; அது உங்கள் விசுவாசத்தை பலப்பரீட்சைக்கு கொண்டு வருகிறது. நீங்கள் சந்தித்திருந்தால்.... தேவனுடைய தேவைகள் சந்திக்கப்பட்டிருக்கும் நீங்கள் அதை முழுவதுமாக ஆலோசனை செய்து, நீங்கள் செய்ய வேண்டுமென்று தேவன் கூறின் அனைத்தையும் நீங்கள் செய்து முடித்திருந்தால், உங்கள் விசுவாசம் அவர் உண்டு என்பதன் பேரில் இளைப்பாறுதல் கொள்கிறது. தேவனைக் குறித்த நிச்சயமுடையவர்களாயிருங்கள். 21அவர் உங்களை சோதிக்கப் பிரியப்படுகிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் விசுவாசத்தின் விளைவு என்னவென்று காண அவர் ஆவல் கொள்கிறார். அது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எவ்விதம் நடந்து கொள்ளுகிறீர்கள் என்று காண தேவனுக்குப் பிரியம்; நீங்கள், “ஓ, கர்த்தாவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன்; நீரே என் இரட்சகர். நீர் என்னை சுகமாக்குபவர் என்று நான் விசுவாசிக்கிறேன்: பரிசுத்த ஆவியைக் கொடுப்பவர் நீரே என்று நான் விசுவாசிக்கிறேன் - எனக்கு தேவையானவைகளையும், அதை அளிக்கும் தேவன் நீரே” என்று நீங்கள் கூறும் போது... உங்கள் பாவங்கள் அனைத்தையும் நீங்கள் அறிக்கையிட்டு, நீங்கள் சுகமடைந்தால் என்ன செய்வீர்கள் என்று தேவனுக்கு வாக்களித்து விட்டு, அது நடக்காமற்போனதினிமித்தம் ஒரு கோழையைப் போல் எங்காகிலும் ஓடிப்போனால், தேவன் உங்களை உபயோகிக்க முடியாது. உங்களை உபயோகிக்க அவருக்கு ஒரு வழியும் இராது. உங்களுக்கு பதிலளிக்க அவருக்கு ஒரு வழியும் இராது. ஏனெனில் அவர் விசுவாசத்தின் மூலம் மாத்திரமே பதிலளிக்கிறவராயிருக்கிறார். அப்படியிருக்க, திடீரென்று நீங்கள் போய்விட்டால், அவரால் பதிலளிக்க முடியாது. ஆனால் உண்மையான விசுவாசமோ அங்கு நின்று கொண்டு, தேவன் உண்டு என்பதை நிச்சயமாக அறிந்துள்ளது. அவர் உண்டு என்று நிச்சயமுடையவர்களாயிருங்கள். உங்கள் பாவங்கள் போன்றவைகளை அறிக்கை செய்ய வேண்டுமென்று தேவன் கேட்டு, அதை நீங்கள் செய்வீர்களானால், விசுவாசம் அவர் உண்டென்று கூறுகின்றது; அது நடக்கப்போவதென்பது உறுதி. உங்கள் வேண்டுகோள் அருளப்பட வேண்டும். அதை நீங்கள் காணத் தவறவில்லையென்று நான் நம்புகிறேன், நீங்கள் தேவனைக் குறித்து நிச்சயமுடையவர்களாயிருந்தால், தேவன் அவருடைய வார்த்தையைக் குறித்து நிச்சயமுடையவராயிருக்கிறார். அவர் உங்களை சோதிக்க மாத்திரமே காத்துக் கொண்டிருக்கிறார். 22அவர் அநேக முறை அவ்வாறு செய்துள்ளார். நாம் ஓரிரண்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். எபிரேய பிள்ளைகளை யோசித்துப் பார்ப்போம். அவர்கள் எந்த விக்கிரத்தையும் வணங்கக்கூடாது. தேவன் அவர்கள் பேரில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர்கள் எரிகிற அக்கினிச் சூளைக்குள் செல்ல வேண்டு மென்று கேள்விப்பட்ட போது, ''எங்கள் தேவன் எங்களை இந்த எரிகிற அக்கினிச் சூளைக்குத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் விடுவிக்காமற்போனாலும், நீர் நிறுத்தின் சிலையை நாங்கள் பணிந்து கொள்ளமாட்டோம்'' என்றனர். பாருங்கள், அவர்கள் தேவனைக் குறித்து உறுதியாயும் நிச்சயமுடையவர்களாயும் இருந்தனர். அவர் யேகோவா என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர் ஜெபத்துக்கு பதிலளிப்பவரென்று அவர்கள் அறிந்திருந்னர். அவர்களுடைய விஷயத்தில் அவர் செய்தாலும் செய்யமற்போனாலும், அது நன்மைக்காகவே இருக்க வேண்டும். எனவே அவர்கள் தங்கள் வாக்குமூலத்தை அளித்து, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, மரணத்துக்குள் நடந்து சென்றனர். அவர்கள் எரிகிற அக்கினிச் சூளைக்குள் சென்ற போது, அவர்கள் எரிந்து போக தேவன் அனுமதித்தாலும், உயிர்த்தெழுதலின் போது அவர்களை மறுபடியும் எழுப்புவாரென்று நிச்சயமுடையவர்களாயிருந்தனர். தேவன் சகலமும் அவர்கள் நன்மைக்கு ஏதுவாகவே நடத்துவாரென்று அவர்கள் அறிந்திருந்தனர். நாமும் தேவனை குறித்து நிச்சயமுடையவர்களாகயிருப்போமானால், தேவன் சகலத்தையும் நமது நன்மைக்கு ஏதுவாகவே நடத்துவாரென்று நாம் அறிந்திருப்போம். 23எனவே அவர்கள் அவ்வாறு கூறினர். அவர்கள் நிச்சயமுடையவர்களாயிருந்தனர். அவர்கள் எரிகிற அக்கினிச் சூளைக்குள் நேரடியாக நடந்து சென்றனர். தேவனும் அவர்களை அங்கு நடந்து செல்ல அனுமதித்து, அவர்களை பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்க அவர் விரும்பினார். ராஜா, “எக்காளம் முழங்கின போது நீங்கள் வணங்கினீர்களா?” என்று கேட்டபோது, அவர்கள், ''இல்லை, நாங்கள் வணங்கவில்லை“ என்று விடையளித்தனர். அங்கு தான் உங்கள் விசுவாசம், இறுகப் பற்றியுள்ளது. “சரி நீங்கள் வணங்கவில்லையென்றால், உங்ளுக்கு அளிக்கப்படவிருக்கும் தீர்ப்பு என்ன தெரியுமா?” “ஆம், உம்முடைய தீர்ப்பு என்னவென்று எங்களுக்குத் தெரியும்.'' ''என் தீர்ப்பு என்னவெனில், சூளையைச் சாதாரணமாய் உள்ளதைப் பார்க்கிலும் ஏழு மடங்கு அதிகமாய்ச் சூடாக்கி, உங்களை அதில் போடுவேன். இப்பொழுதாவது சிலையை பணிந்து கொள்ள உங்களுக்குப் பிரியமா?'' “இல்லை, நாங்கள் பணிந்து கொள்ளமாட்டோம்'' அங்கு தான் அவர்கள் விசுவாசம். தேவன், ''சரி, அவர்கள் அதைக் குறித்து என்ன செய்கிறார்கள் என்று நான் பார்க்கட்டும். அவர்கள் விசுவாசம் எவ்வாறு கிரியை செய்கிறதென்று நான் காணட்டும்“ என்றார். நேபுகாத்நேச்சார், ''அவர்கள் கைகளையும் கால்களையும் கட்டி சூளைக்குத் தூக்கிச் செல்லுங்கள்“ என்றான். அவர்கள் முகங்களில் அக்கினி கொண்டவர்களாய் சூளைக்கு செல்லத் தொடங்கினர். தேவன் அப்பொழுதும் சும்மா நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அவர்களோ அவர் தேவனென்று நிச்சயமாய் அறிந்திருந்தனர். அவர்கள் தங்கள் அறிக்கையை செய்துவிட்டனர். அவர்களுக்கு தெரிந்த வரைக்கும் அவர்கள் எல்லாவற்றையும் சரிபடுத்திவிட்டனர். அவர் தேவனென்று அவர்கள் நிச்சயமாய் அறிந்திருந்தனர். அவர்கள் எரிகிற அக்கினிச்சூளைக்குச் சென்றனர். கடைசி நேரத்தில், அவர் காற்று ரதத்தில் பரலோத்திலிருந்து சவாரி செய்து இறங்கி வந்து, அவர்கள் மேல் காற்று வீசி, அவர்களை ஆறுதல்படுத்தி, அவர்களுடன் பேசினார். உங்கள் விசுவாசம் கிரியை செய்யும் நிலையையடைய தேவன் அனுமதிக்கிறார். 24பழைய ஏற்பாட்டின் காலத்தில் யோபு என்பவன் இருந்தான். நம்மை குற்றப்படுத்தும் சாத்தான், அவன் ஒரு இரகசிய பாவியென்று குற்றம் சாட்டினான். ஆனால் யோபுவோ அவன் பாவஞ் செய்யவில்லையென்று அறிந்திருந்தான். அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் அவன் அறிக்கை செய்து அதற்காக தகனபலி செலுத்தினதை அவன் அறிந்திருந்தான். அதுவே தேவனுடைய தேவையாயிருந்தது. தேவனுக்குத் தேவையானதெல்லாம் தகனபலியும் பாவ அறிக்கையும் மாத்திரமே, யோபு இவையனைத்தையும் செய்திருந்தான். சாத்தான், ''அவனுடைய ஒட்டகங்களை நான் எடுத்துக் கொள்கிறேன், அவன் ஐசுவரியவான். அவனுடைய ஆடுகளை எடுத்துக் கொள்கிறேன்“ என்றான். முடிவில் யோபுவின் இருதயத்துக்கு மிகவும் அருகாமையிலிருந்த அவனுடைய பிள்ளைகளையே சாத்தான் எடுத்துக் கொண்டான். இருப்பினும் யோபு அமைதியாயிருந்தான், ஏனெனில் தேவன். அவர் தேவனென்று அவன் நிச்சயமாய் அறிந்திருந்தான், ஏனெனில் அவன் அவருடன் பேசியிருக்கிறான், அவன் அவருடைய தேவைகளை சந்தித்திருக்கிறான். அவன் ஆராய்ந்து பார்த்து, ''நான் தகனபலி அனைத்தும் செலுத்தி விட்டேனே. ஒருக்கால் என் குமாரர் விருந்து கொடுத்து, என் குமாரத்திகள் விருந்துக்கு சென்றிருந்த போது, அவர்களுடைய இருதயத்தில் இரகசியமாக பாவம் செய்திருக்க வகையுண்டு. எனவே அவர்களின் சார்பாக நான் தகனபலி செலுத்தி, அவர்களுடைய தவறுகளை அறிக்கை செய்வேன்“ என்றான். 25ஓ தேவனே, ஒரு மனிதன் தேவன் கூறினதைக் கைக்கொள்ளும் போது, அவர் தேவனென்பதை நிச்சயமாய் அறிந்திருக்கிறான், அவர் உத்தரவு அருள வேண்டும். ஒவ்வொரு முறையும் விசுவாசம் அவரை காட்சியில் கொண்டு வருகிறது. நீங்கள் சரியென்று அறிந்திருப்பதை செய்து, அவருடைய தேவையை சந்தித்து, அநியாயமாய் எடுத்துக் கொண்டதை திரும்பக் கொடுத்து (restitution). தேவனுக்கு முன்பாக உங்கள் விண்ணப்பத்தை வைக்கும் போது, அவர் எவ்வளவு மெளனமாயிருந்தாலும் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, அவர் இன்னமும் தேவனாயிருந்து, அந்த விசுவாசத்தை அங்கு வைக்கக் காத்திருக்கிறார். உன் வேலையை நீ செய்துவிட்டாய், உன் விசுவாசம் கிரியை செய்வதை அவர் காண விரும்புகிறார். நீ என்ன செய்கிறாய் என்று காண அவர் விரும்புகிறார். உனக்கு எண்ணெய் பூசி ஜெபம் ஏறெடுக்கப்பட்டிருந்தால், அதை குறித்து நீ என்ன விசுவாசிக்கிறாய் என்று காண தேவன் காத்துக் கொண்டிருக்கிறார் - அடுத்த ஞாயிறு அல்லது அடுத்த நாள் நகரத்துக்கு வரும் அடுத்த தெய்வீக சுகமளிப்பவரிடம் ஓடுவதல்ல. உன் விசுவாசம் எவ்வாறு கிரியை செய்கிறது என்று காண அவர் காத்துக் கொண்டிருக்கிறார் - அடுத்த நாள் திரும்பிச் சென்று, “நான் மிகவும் மோசமான நிலையில் உள்ளேன், நான் சுகமடையவில்லை என்று எண்ணுகிறேன்'' என்று கூறுவதல்ல. அப்படியானால், முதலாவதாக ஜெப வரிசையில் வருவதற்கே நீ தகுதியல்ல, நீ இன்னும் ஆயத்தமாகவில்லை என்பதை அது காண்பிக்கிறது. அவர் தேவனென்று நீ விசுவாசிப்பதில்லை. 26நீ, ''சகோ. பிரன்ஹாமே, நான் உம்முடன் இணங்க மாட்டேன்“ எனலாம். உங்கள் சொந்த கிரியையே நீங்கள் யாரென்பதை நிரூபிக்கின்றது. ”அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்“ (மத்.7:16). ஒரு மனிதன் தன்னை கிறிஸ்தவனென்று அழைத்துக் கொண்டு, அவன் இன்னமும் குடித்து, புகை பிடித்து, சூதாடி, மோசமான ஹாஸ்ய துணுக்குகளைக் கூறி, வேதாகமத்தின் ஒரு பாகம் சரியென்றும், ஒரு பாகம் சரியல்லவென்றும் கூறினால். அவன் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கலாம், வேதாகமத்தின் ஒரு பாகம் சரியல்லவென்று மறுக்கலாம். அவன் இன்னமும் பாவியாயிருக்கிறான். அவன் இன்னும் சரியாகவில்லை. ஆனால் நீங்கள் வெளிப்படையாக, தேவன் மாறாமல் அதே தேவனாயிருக்கிறார் என்று அறிக்கை செய்து, உங்கள் ஜீவியத்தை அவர் கரங்களில் சமர்ப்பித்து, “கர்த்தாவே, நான் களிமண், நீர் குயவன்” என்று கூறினால், உங்கள் சித்தப்படி எதை வேன்டுமானாலும் கேளுங்கள். விசுவாசம் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை; அது அங்கேயே நிற்கும். சூழ்நிலைகள் வலது புறமாகவும் இடது புறமாகவும் விழ நேரிட்டாலும், விசுவாசம் ஒருபோதும் அசையாது. ஏனெனில் அவர் தேவனென்று நீங்கள் உறுதி கொண்டவர்களாய் இருக்கின்றீர்கள். அவர் தேவனாயிருந்தால், தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறார். அவர் ஒன்றை வாக்களித்து அதை முறித்துப் போடுவதில்லை. அவர் தேவனாயிருந்தால், தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும். ஓ, அது எனக்குப் பிரியம். அவர் அதில் நிலை கொள்ள வேண்டும். 27யோபு தன் பலிகளை செலுத்தினான்; அவன் எல்லாவற்றையும் செய்தான். அவன் சரியென்று அவன் அறிந்திருந்தான். அங்கு சபை அங்கத்தினர்கள் வருகின்றனர் - வேறு சில ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ''யோபுவே, நீர் பாவியென்று அறிக்கை செய்து விடுவது நல்லது. நீர் பாவியாயிராவிடில், நீர் தண்டிக்கப்பட தேவன் இவ்வாறு அனுமதிக்கமாட்டார்“ என்றார்கள். ஆனால் யோபுவோ, ''நான் என் பாவ அறிக்கையை செய்து விட்டேன். தேவனுக்கு முன்பாக தகனபலியைச் செலுத்திவிட்டேன். ''நான் பாவியல்ல“ என்றான். அவனுடைய நிலையென்னவென்று அவன் அறிந்திருந்தான். எல்லாமே மிகவும் கடினமாக சென்று கொண்டேயிருந்தது. யோபைத் தாழ்த்த முடியும், அவன் தேவனையும் அவன் செலுத்தின தகனபலியையும் மறுதலிக்கும் நிலைக்கு அவனைக் கொண்டு வந்துவிட்டன. நீ ஒன்றை அறிக்கை செய்து விட்டு, அதை மறுபடியும், அறிக்கை செய்ய நினைப்பாயானால், அது உன் பலவீனத்தைக் காட்டுகின்றது. உனக்கு தேவன் பேரிலுள்ள சந்தேகத்தை அது காட்டுகின்றது. நீ தேவனை ஒன்று கேட்டு விட்டு, அதை சந்தேகித்து நடந்து கொண்டிருப்பாயானால், நீ சந்தேகியேயன்றி விசுவாசியல்ல. யோபு தான் எந்நிலையில் இருந்தான் என்பதை நன்கு உணர்ந்திருந்தான். அந்த அஸ்திபாரத்தின் மேல் அவன் உறுதியாய் நின்றான். 28தான் மரிக்கும் தருவாயில், ப்ரூயிட் என்பவர் இவ்வாறு கூறினதில் வியப்பொன்றுமில்லை. கிறிஸ்து என்னும் திடமான பாறையின் மேல் நான் நிற்கிறேன் மற்றெல்லா நிலமும் அமிழ்ந்து போகும் மணலே யோபின் அறிக்கையாகிய அந்த திடமான பாறையின் மேல். அவனுடைய அருமையான மனைவியும் நடந்து சென்று விட்டாள். அவனுடைய உடல் நிலைகுன்றி, அவனுடைய உடல் முழுவதிலும் பருக்கள் தோன்றின போது, அவன் தன்னைச் சுரண்டிக் கொண்டு, தான் பிறந்த நாளைச் சபித்தான். அவன், “சூரியன் பிரகாசிக்காமல் இருப்பதாக, சந்திரன் இரவில் தோன்றாமலிருப்பதாக” என்றான். அவன் மனைவி, “யோபுவே, நீர் மோசமான நிலையில் இருக்கிறீர், நீர் ஏன் தேவனை சபித்து ஜீவனை விடக்கூடாது?'' என்றாள். அவன், “நீ பயித்தியக்காரி பேசுகிறது போல் பேசுகிறாய்” என்றான். தேவன் இருக்கிறார் என்று அவன் உறுதி கொண்டிருந்தான். அவன் தேவையை சந்தித்திருந்தான். ஓ, நான் பக்தி பரவசப்படுகிறேன். அவன் தேவனுடைய தேவைகளைச் சந்தித்திருந்ததை அறிந்திருந்தான். அதனுடன் அது முடிவு பெற்று விட்டது. தேவன் அவனுடைய விசுவாசத்தை சோதித்துக் கொண்டிருந்தார். அவர் உங்களுடைய விசுவாசத்தையும் சோதிப்பார், என்னுடைய விசுவாசத்தையும் சோதிப்பார். 29நாம் அவருடைய தேவைகளை சந்திப்போமானால், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” (அப். 2:38). அது அவருடைய வாக்குத்தத்தம். உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்.'' (யாக்.5:14-15). அத்துடன் அது முடிவு பெற்று விட்டது. ''உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்.“ (யாக்.5:16). நீங்கள் தேவனுடைய தேவைகளை சந்தித்திருந்தால், “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” (மத்.16:17-18). அத்துடன் அது முடிவு பெறுகிறது. தேவனைக் குறித்து நிச்சயமுடையவர்களாயிருங்கள். அது தேவனுடைய வார்த்தையென்று உங்கள் இருதயத்தில் விசுவாசிக்கின்றீர்கள் என்பதனை குறித்து நிச்சயமுடையவர்களாயிருங்கள். யோபுவின் மனைவி, ''அவரைத் தூஷித்து ஜீவனை விடும். நீர் மோசமாகிக் கொண்டே போகிறீர்“ என்றாள். 30சாத்தான் இவ்வாறு உங்களிடம் கூற விரும்புகிறான்: “நீ அபிஷேகம் பண்ணப்பட்ட போது இருந்ததைக் காட்டிலும் இப்போழுது சுகமடைந்த நிலையில் நீ காணப்படவில்லை. போதகர்கள் உனக்கு ஜெபித்தபோது நீ இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது நீ சுகமடைந்த நிலையில் காணப்படவில்லை. முதலாவதாக அவர்கள் செய்வதே சரியில்லை'' என்பான். போதகர் என்ன செய்தார் என்பது பற்றி கவலையில்லை; உனக்கு ஜீவனுள்ள தேவன் பேரிலுள்ள விசுவாசமே முக்கியம் வாய்ந்தது. போதகர் என்னவாயிருக்கிறார் என்பதல்ல; தேவன் என்னவாயிருக்கிறார் என்பதே முக்கியம் வாய்ந்தது. போதகர் வாக்குத்தத்தம் பண்ணவில்லை; தேவனே வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அது போதகரைச் சார்ந்ததல்ல; அது தேவனையும் அது தேவன் என்று விசுவசிக்கும் உன் விசுவாசத்தையும் சார்ந்தது. எனவே தேவனைக் குறித்து நிச்சயமுடையவர்களாயிருங்கள். அது தேவனென்றும், அது தேவனுடைய வார்த்தையென்றும் உறுதி கொள்ளுங்கள். தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார். யோபு தன் மனைவியினிடம், ''நீ பயித்தியக்காரி பேசுகிறது போலப் பேசுகிறாய், கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்'' என்றான். தேவன் இருக்கிறார் என்று அவன் நிச்சயமுடையவனாயிருந்தான். அவன் அதை தன் வாயினால் கூறினபோது, இடிகள் முழங்கத் தொடங்கின. மின்னல்கள் அடிக்கத் தொடங்கின; தேவன் காட்சியில் வந்தார். அது எப்பொழுதுமே தேவனைக் காட்சிக்கு அழைக்கிறது. நீண்ட காலம் மெளனமாக அவர் உட்கார்ந்திருக்கிறார். 31இப்பொழுதும் அவர், நரகத்துக்கு போகவிருக்கும் இந்த அமெரிக்கர்களையும், ஸ்தாபனங்களுக்கு சொல்லும் மாயமாலக்காரரையும் பார்த்துக் கொண்டு, அதையே செய்து கொண்டிருக்கிறார். நான் கோபங்கொள்ளவில்லை. ஆனால் தேவனிடத்தில் சரியாயுள்ள எவரையுமே பாவம் கோப மூட்டுகின்றது. நான் தேசத்தின் மேல் கோபங்கொள்ளவில்லை, ஜனங்களின் மேல் கோபங்கொள்ளவில்லை. ஆனால் ஜனங்களைக் குருடாக்கின பிசாசின் மேல் கோபங்கொள்கிறேன். இந்த குருடரான மேய்ப்பர்களும் போதகர்களும், மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு விதமான வேத சாஸ்திரத்தை அவர்கள் கைக்கொள்வதுடன் அவர்களை விட்டு விடுகின்றனர். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார். தேவன் இருக்கிறார் என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமுடையவர்களாய் இருப்பது நல்லது, “தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து, அதன் பெலனை மறுதலிப்பது... (2.தீமோ3:5). 32இந்த ஏழை ஸ்திரீ தேவன் இருக்கிறார் என்பதை அறிந்திருந்தாள். பானையிலுள்ள மாவு சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்தது, சூழ்நிலையும் படிப்படியாக மோசமாகிக் கொண்டே வந்தது. ஆனால் அப்படி நடக்க தேவன் அனுமதித்தார். அப்படி செய்வதில் தேவன் பிரியம் கொள்கிறார். நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதனைக் காண்பதற்கென உங்கள் விசுவாசத்தை சோதனைக்குட்படுத்த அவர் பிரியப்படுகிறார். உங்களுக்கு எண்ணெய் பூசி ஜெபம் செய்யப்பட்ட பிறகு உங்கள் நிலையை மோசமாக்கி, “சாத்தானே, வா, அவனை சோதனைக்குட்படுத்து; அவன் என்னை விசுவாசிக்கிறான் என்று நானறிவேன்'' என்றார். தேவன் எக்காலத்தும் துதிக்கப்படுவாராக! ஓ, என்னே! ''இப்பொழுது அவனை சோதனைக்குட்படுத்து; அவன் என் வார்த்தையை ஏற்றுக் கொள்கிறான் என்று அறிவேன்” உங்களைக் குறித்து அவர் அவ்வாறு கூற முடியுமா? அவர் யோபுவைக் குறித்து அவ்வாறு கூறினார்: “நீ என்ன வேண்டுமானாலும் அவனுக்கு செய், ஆனால் அவனுடைய பிராணணை மாத்திரம் எடுத்துக் கொள்ளாதே. அவன் என்னை நேசிக்கிறான் என்று நானறிவேன். அவன் தகனபலி செலுத்தியிருக்கிறான், அவன் தேவைகளை நிறைவேற்றியிருக்கிறான். நான் அவனைச் செய்யக் கட்டளையிட்டவை அனைத்தும் அவன் செய்துவிட்டான். அவன் அதை விசுவாசித்தான். உனக்கு விருப்பமானால், அவனை அக்கினித்தழலின் மேல் வறுத்து எடு” என்றார். சாத்தான் அவனுக்கிருந்த எல்லாவற்றையும் அவனிடமிருந்து எடுத்துப் போட்டான். ஆனால் தேவனோ அதை இரட்டத்தனையாய் அவனுக்குத் திரும்ப அளித்தார். அவர் நிச்சயம் அப்படி செய்வார். 33அவர் தேவனென்று நாம் உண்மையில் விசுவாசிக்கிறோமா என்பதைக் காண்பதற்காக நம்முடைய விசுவாசத்தை அவர் சோதனைக்குட்படுத்துகிறார். அந்த ஸ்திரி, “நான் ஜெபித்தேன், நான் ஜெபித்தேன், நான் தகுதியற்ற ஒரு புறஜாதி” என்று கூறினாள் என்பதில் ஐயமில்லை. இயேசு அவளைக் குறித்து வேதத்தில் கூறினார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர், ''எலியாவின் நாட்களிலே அநேகம் விதவைகள் இருந்தார்கள் அல்லவா? ஆயினும் எலியா ஒரு விதவையினிடத்திற்கு மாத்திரமே அனுப்பப்பட்டான்“ என்றார் (லூக்.4:25-26) அவள் ஒரு புறஜாதி. ஓ, அவள், “நான் ஜெபித்தேன்” என்றாள். அவள் அந்த கடைசி அப்பத்தைக் கண்ட போது, மரணம் அவள் வாசலுக்குள் பிரவேசித்து கதவண்டை நின்று கொண்டிருந்தது. அப்பத்தை ஆளுக்கு ஒரு கடிகடித்து தின்றுவிட்டால், அதன் பிறகு அவளும் அவளுடைய மகனும் இறந்து விடுவார்கள். அவள் இரவு முழுவதும் ஜெபம் செய்து கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. வெப்ப காற்று அடித்துக் கொண்டிருந்தது, பூமி உலர்ந்து விட்டது ஜனங்கள் தெருக்களில் அழுது கொண்டும் கூக்குரலிட்டுக் கொண்டுமிருந்தனர். அவள் வீட்டில் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய சிறிய மகனை அவள் கண்டாள். அவன் அணிந்து கொண்டிருந்த 'பைஜாமா'வை அவள் கண்டாள். அது கிழிந்து போய், அவனுடைய சிறு பாதங்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. அவளுடைய கைகளை அவள் கண்டாள். அவை சுருக்கம் விழுந்திருந்தன. அவள் முன்னும் பின்னும் நடந்தாள். ஆனால் அவள், “அவர் தேவனென்று நானறிவேன். என் அறிக்கைகளையெல்லாம் நான் செய்துவிட்டேன். அவர் கேட்கும் எல்லாவற்றையும் நான் செய்து விட்டேன். அவருடைய மகிமைக்காக எங்கள் பிராணனை கேட்கிறேன்” என்றாள். தேவன் அவளைக் கண்டார். 34மற்றவர்களோ வெளியில் சென்று பெரிய நடனத்தில் பங்கு கொண்டனர். அவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டு, நவீன தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்ற ஏதோ ஒன்றில் பங்கு கொண்டு, உலகத்துடன் சென்று கொண்டிருந்தனர், ஆனால் இந்த ஸ்திரீயோ தேவனுடன் தனிமையில் இருந்தாள். காலை உதித்தது. அவள், “இந்த சிறுவன் தின்பதற்கு ஏதாவது வேண்டுமென்று கேட்டு இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தானே, ஒரு கைப்பிடியளவு மாவு (meal) வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?” என்றாள். கிறிஸ்து தான் அந்த போஜனம் (meal) என்று உங்களுக்குத் தெரியும். கிறிஸ்து போஜன பலியென்று எந்த வேத மாணாக்கரும் அறிவர். அந்த மாவு ஒரு விசேஷித்த சொரசொரப்புடன் ஒரே அளவாக அரைக்கப்பட வேண்டும். ஏனெனில் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஒவ்வொரு விசுவாசியும் அதை விசுவாசித்து அதில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறான். அல்லேலூயா! உங்களுக்கு விருப்பமானால், நீங்கள் உங்கள் பழைய, தணிந்த, சடங்காச்சாரமுள்ள மார்க்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நானே கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன். நாத்திகர் நிறைந்த இவ்வுலகில், இதன் பேரில் நான் நிற்கிறேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் இன்னமும் விசுவாசிக்கிறேன். அவை ஒரே அளவு துண்டாக வெட்டப்படுகின்றது. ஏனெனில் அவர் மாறாதவராயிருக்கிறார். அவர் அன்றிருந்த அதே தேவனாக, இன்று காலை இருக்கிறார். அவர் எக்காலத்தும் அதே தேவனாக இருக்கிறார். அதைத்தான் அந்த மாவு குறிக்கின்றது. 35எண்ணெய் பரிசுத்த ஆவியைக் குறிக்கின்றது. அதை நாம் எசேக்கியல் 4ம் அதிகாரம் போன்ற வைகளிலிருந்து அறிகிறோம். அதனால் தான் நாம் எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றோம். அது ஆவி அது என்ன? ''அவரை ஆவியோடும் உண்மையோடும் (Truth) தொழுது கொள்பவர்களைப் பிதா தேடுகிறார்“ என்று யோவான் 4ம் அதிகாரம் உரைக்கின்றது. இயேசுவே சத்தியம் (Truth). அவரே போஜனபலி - இந்த எண்ணெயும் ஆவியும், ஆவியை சத்தியத்துடன் கலக்கும்போது, அது ஏதாவதொன்றைத் தரவேண்டும். அதை ஒன்று சேருங்கள், அப்பொழுது அப்பம் கிடைக்கின்றது. ஓ, உங்கள் விசுவாசம் எங்கே? தேவனுடைய வார்த்தையானது எளிமையில் பிரசங்கிக்கப்படும் போது, அதன் வல்லமையில் அது இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை காண்பித்து, போஜனத்துக்காக வார்த்தை புறப்பட்டு செல்கிறது, ஆனால் அதனுடன் நீங்கள் எண்ணெய் சேர்க்க வேண்டும். அது ஒரு கைப்பிடியளவு அல்லது ஒரு கரண்டியளவு இருக்கலாம். என்னவாயிருப்பினும் உண்மையானது. அது. 36இப்பொழுது, அது எதற்காக ஆயத்தமாயுள்ளது? அது சிலுவைக்கு ஆயத்தமாயுள்ளது. அது சுயதியாகத்துக்கு ஆயத்தமாயுள்ளது. அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். வார்த்தையானது பிரசங்கிக்கப்பட்டு, அதனுடன் கூட நீங்கள் எண்ணெய் கலப்பீர்களானால், எல்லா வலியையும், எல்லா வியாதியையும் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ள எல்லாவற்றையும் வெறுத்து, உதறித் தள்ளி, வார்த்தையின் மேல் உறுதியாய் நிற்க நீங்கள் சுயதியாகம் செய்பவர்களாயிருப்பீர்கள். மருத்துவர் இதை, அதை, மற்றதை கூறுகின்றார்; அது உங்களில் எந்த சிறு வித்தியாசத்தையும் உண்டாக்காது. நீங்கள் வார்த்தையில் உறுதியாய் நிற்கின்றீர்கள், ஏனெனில் தேவன் அவ்வாறு கூறியுள்ளார். மாவு வருகின்றது. நீங்கள் எண்ணெயை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இரண்டையும் ஒன்றாக கலக்கின்றீர்கள். 37இப்பொழுது, நான் ஒரு சத்தத்தைக் கேட்கிறேன், அது பொழுது விடிந்து சற்று கழிந்து. ஒரு சத்தம், ''நீ முற்றத்துக்கு போய் இரண்டு விறகு சுள்ளிகளை பொறுக்கி கொண்டு வா“ என்றது. வேதம் இரண்டு என்று கூறுவதை கவனித்தீர்களா? (1.இரா.17:12). சிலுவை. அவளிடம் மாவும் எண்ணெயும் உள்ளன; இப்பொழுது அவள் அதைக் கொண்டு செயல்புரிய அழைக்கப்படுகிறாள். உங்களிடம் உங்களுக்குத் தேவையான மாவும் எண்ணெயும் இருந்த போதிலும், நீங்கள் செயல்புரிய வேண்டும் - சுய தியாகம், இரண்டு சுள்ளிகள். பண்டைய காலங்களில் தீ மூட்டுவதற்கு இம்முறையைக் கையாண்டனர். இதைக் காட்டிலும் சிறந்த முறையை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. நீங்கள் ஒரு கட்டையை எடுத்து, மற்றொரு கட்டைக்கு குறுக்கே வைத்து, நடுவில் தீ மூட்டி, இரு முனைகளிலிருந்தும் உள்ளே தள்ள வேண்டும். அமெரிக்க இந்தியர்கள் அப்படித் தான் தீ மூட்டுவது வழக்கம். நானும் கூட பலமுறை, ஒரு கட்டையை இந்த பக்கமும், மற்றொரு கட்டையை அந்த பக்கமும் வைத்து தீ மூட்டி, அது எரிய எரிய உள்ளே தள்ளி, இரவு முழுவதும் எரித்திருக்கிறேன். அந்த கட்டை சிலுவையே. வேதம் இரண்டு விறகுகள் என்று கூறகின்றது. சத்தமானது, “முற்றத்துக்கு சென்று இரண்டு விறகு சுள்ளிகளை பொறுக்கிக் கொண்டு வா'' என்றது. அதே சமயத்தில் மலையின் மேல் ஒரு சத்தம் தீர்க்கதரிசியிடம் முழங்கி, ”நீ ஊருக்குப் போ; நான் கட்டளையிட்டேன்...'' என்றது. ஓ, என்னே! இருவரும் கீழ்ப்படிந்தனர். ஏதோ ஒன்று நடக்க வேண்டும். இருவரும் கீழ்ப்படிகின்றனர். 38போதகர் வார்த்தையைப் பிரசங்கித்து, அதை கேட்கிறவன் விசுவாசித்து செயல் புரிந்தால், ஏதாவதொன்று நிகழ்ந்தே ஆக வேண்டும். நீ பாவியாயிருந்தால், நீ இரட்சிக்கப்பட வேண்டும். நீ வியாதியாயிருந்தால், நீ சுகமடைய வேண்டும். ஏனெனில் நாம் தேவனை குறித்து நிச்சயமுடையவர்களாயிருந்தால், தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணினார் என்பதை உணருகிறோம். அவர் தேவனாயிருப்பது நிச்சயமானதால், அவர் தமது வார்த்தையை நிறைவேற்ற வேண்டும். நிச்சயமாக! கட்டளை என்னவெனில், “நீ ஊருக்கு போ. அங்கே ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன்...'' என்பதாம். தீர்க்கதரிசிக்கு ஒரு தரிசனம் உண்டாகின்றது. இதோ அவன் நடந்து வருகிறான். அவன் எங்கே போகிறான் என்று அவனுக்குத் தெரியாது. ஆதனால் ஒரு வித்தியாசமுமில்லை. அவன் கீழ்படிய மாத்திரம் செய்கிறான். 39அவளுக்கும் விறகுகள் எங்கு கிடக்கின்றன என்று தெரியாது. ஆனால் முற்றத்தில் எங்கோ இரண்டு விறகு சுள்ளிகள் கிடக்கின்றன. அவள் புறப்பட்டு முற்றத்துக்கு செல்கிறாள். அவள் சுற்று முற்றும் பார்க்கிறாள். ''ஓ, எவ்வளவு வெப்பமாயுள்ளது!'' என்கிறாள். ஊரில் எழும்பும் கூக்குரல்; இரவில் பதுங்கி செல்பவர்கள் மது அருந்தி செல்கின்றனர். அவள் தெருவை நோக்குகின்றாள். அவள் ஒன்றையும் காணவில்லை. அவள் ஒரு விறகு சுள்ளியை காண்கிறாள்- சிலுவையின் ஒரு பாகம், சுயதியாகம். அவள் மற்றொரு விறகு சுள்ளியையும் பொறுக்குகிறாள். அவள் இரண்டாவது சுள்ளியை பொறுக்கின் போது.... ஓ, அது எவ்வளவு அந்த காரமாக இருந்திருக்கும்: மரணம் வாசலில் படுத்துக் கிடக்கிறது. அவளும் அவளுடைய குமாரனும் அந்த அப்பத்தில் சிறு துண்டை சாப்பிட்டு விட்டு மரித்துப் போக வேண்டும். அவ்வளவு தான்! சில நேரங்களில் அந்தகாரத்தின் மத்தியில் நாம் சத்தத்தைக் கேட்கின்றோம். அவள் இரண்டாவது சுள்ளியை பொறுக்கிக் கொண்டு திரும்பி வந்த போது, வாசலிலிருந்து ஒரு சத்தம் புறப்பட்டு வந்து, “எனக்குப் பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்றது. 40தன் கைகளில் இருசுள்ளிகளையும் வைத்துக் கொண்டு அவள் திரும்பி, பார்த்தாள், ஏற்கனவே மாவும் எண்ணெயும் ஒன்றாக கலக்கப்பட்டுவிட்டது. அவள் அதை கலந்து விட்டதாக கூறினாள். அது தான் செய்யப்பட வேண்டும். வார்த்தையும் ஆவியும் ஒன்றாக கலக்கப்பட்டு, சுய தியாகம் என்னும் சிலுவையின்மேல் வைக்கப்பட்டு, நீங்கள் கேட்டதற்கு முரணாயுள்ள எதையுமே ஏற்க மறுக்க வேண்டும். அது உண்மை. ''அதை நான் கலந்தேன். இப்பொழுது அந்த விறகு சுள்ளிகளை கொண்டு வரப்போகிறேன்.'' சத்தமானது, “எனக்குப் பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்றது. அவள் பார்க்கிறாள். ஒரு மனிதன் வாசலின்மேல் சாய்ந்து கொண்டு நின்று கொண்டிருப்பதை அவள் காண்கிறாள். அவன் மெலிந்த தாடையும், தாடியும், வழுக்கை மண்டையும் கொண்டவனாய், ஒரு பழைய ஆட்டுத் தோலினால் அவனைச் சுற்றிக் கொண்டவனாய், வாசலிலிருந்து உள்ளே நோக்கிக் கொண்டிருந்தான். அவன் ஒருவிதமான தயவுள்ள, நாணயமுள்ள வயோதிபனாக காணப்பட்டான். அவள், ''என் தண்ணீரை அவருடன் பகிர்ந்து கொள்கிறேன்“ என்றாள். ஜீவத் தண்ணீர். அதை யாருக்காகிலும் கொடுத்து, அல்லது யாரிடமாவது அதைப்பற்றி கூறி, எங்கு செல்லவும் சித்தமாயிருக்கிறாயா? 41“ஒரு நிமிடம்.'' அவள் தன் கைகளில் சுள்ளிகளை வைத்துக் கொண்டே திரும்ப வருகிறாள். மறுபடியுமாக அந்த சத்தம் முழங்கினது; “உன் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது மாத்திரமல்ல, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்கு கொண்டு வா.” ஜீவ அப்பம். ஜீவத் தண்ணீர், அது ஜீவனைக் கொடுக்கக் கூடியதா? அது அழிந்து போகக் கூடியது. அது அழிந்தவுடனே, அவளும் செத்து விடுவாள். “உன் தண்ணீரையும் உன் அப்பத்தையும் என்னிடத்தில் கொண்டு வா.” நாம் இங்கு என்ன காண்கிறோம்? இங்கு நாம் என்ன பாடத்தை காண முடிகிறது? ''முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும்.'' (மத்.6:33). கொஞ்சம் தண்ணீரும், கொஞ்சம் அப்பமும் எனக்குக் கொண்டு வா.“ அவள் தனது வருத்தத்தில் திரும்பிப் பார்க்கிறாள். அவள், “ஐயா!” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது - அது போன்ற ஏதோ என்று - “நான் கண்ட மனிதர்களில் நீர் வித்தியாசப்பட்டவர். நான் பேசக் கேட்ட மனிதர் அனைவரிலும், நீர் கூறுவதை உறுதியாகக் கூறுகிறீர். ஆனால் என்னிடம் கொஞ்சம் மாவே உள்ளது - ஒரு கைப்பிடியளவும், ஒரு கரண்டியளவு எண்ணெயும். அதை நான் கலந்து விட்டேன். இப்பொழுது. இப்பொழுது இந்த இரண்டு சுள்ளிகளைக் கொண்டு அப்பம் சுடப்போகின்றேன். நானும் என் குமாரனும் அதைச் சாப்பிட்டுச் சாகப் போகின்றோம். அவ்வளவு தான் என்னிடம் உள்ளது.'' 42அடுத்ததாக நாம் என்ன கேட்கிறோம்? “முதலில் சிறிய அடையை என்னிடத்தில் கொண்டு வா!'' தேவன் முதலில் யார் என்ன கூறின போதிலும், எது என்ன கூறினாலும், எந்த அத்தாட்சி இருப்பினும், அது எவ்வளவு அந்தகாரமாகத் தென்பட்டாலும், அது எதுவாயிருப்பினும், தேவனை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள். அவருடைய வார்த்தையே முதலில். “நான் சுகமடைய முடியாது என்று மருத்துவர் கூறுகின்றார். அவருடைய வார்த்தை முதலில். ”நான் மிகப் பெரிய பாவி“; ”நான் ஒரு வேசி“; ”நான் ஒரு குடிகாரன்!“ தேவனுடைய வார்த்தை முதலில். ''உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்.''(ஏசா.1:18). முதலில் தேவன். ''முதலில் சிறிய அடையை என்னிடத்தில் கொண்டு வா. உன்னிடமுள்ள எல்லாவற்றையும் என்னிடத்தில் கொண்டு வா.“ அவருடைய கரங்களில் அதைக் கொடுக்க உனக்கு சித்தமா? என் ஜீவியத்தையும், நான் என்னவாயுள்ளேனோ, அது அனைத்தும், எனக்கு ஐம்பது வயதாகின்றது. “வில்லியம் பிரான்ஹாமே, அதை என்னிடம் கிடத்த உனக்கு சித்தமா? சிறு பிள்ளைகளே, உங்கள் ஜீவியத்தை என்னிடம் கிடத்த உங்களுக்கு சித்தமா? உங்களால் அதை செய்ய முடியுமா?வியாதிப்பட்டுள்ளோரே, என்னை உங்களால் நம்ப முடியுமா? என்னை முதலில் வையுங்கள். 43“உன் கையில் ஒரு சிறு அடையும் கொஞ்சம் தண்ணீரும் என்னிடத்தில் கொண்டு வா.” அவள் அவனைப் பார்த்தாள். அந்த மனிதன் என்ன பேசுகிறான் என்பதனை அறிந்திருக்கிறான் என்று ஏதோ ஒன்று அவளிடம் கூறினது. தேவன் தமக்குச் சொந்தமானவர்களை அறிந்திருக்கிறார். ஆடுகள்.... என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கிறது. அது வேதப் பூர்வமானதா இல்லையா, அது சரியா இல்லையாவென்று அவை அறிந்திருக்கின்றன.'' அவள் கீழ்ப்படிந்து உள்ளே செல்கிறாள். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். தீர்க்கதரிசி செய்யக் கூறினதற்கு கீழ்ப்படிய அவள் உள்ளே செல்லும் போது, ஒவ்வொரு மனிதனும் கேட்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இடி முழக்கம் பரலோகத்திலிருந்து இறங்கி வருகிறது. ஓவ்வொரு பாவியும் ஒவ்வொரு நோயாளியும் கேட்க வாஞ்சிக்கும், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்னும் இடி முழக்கம் தீர்க்தரிசியின் சத்தத்திலிருந்து புறப்பட்டு வருகிறது. அதை கேட்க நாம் எவ்வளவு வாஞ்சையாயுள்ளோம். 44நான் காரோட்டிச் செல்லும் வழியில் ஜனங்கள் எவ்வாறு உட்கார்ந்து கொண்டு, “இந்த வீட்டுக்கு வாருங்கள்; என் மகள் இப்படிப்பட்ட நிலையில் இருக்கிறாள், என் குழந்தை இன்னின்ன நிலையில் உள்ளது. வார்த்தை மாத்திரம் சொல்லும்'' என்கின்றனர்! உங்கள் வாயில் அது போடப்படுவதற்கு முன்பு அதை எப்படி உங்களால் கூறமுடியும்? அதை நீங்களே கூறுவதாகிவிடும். ஆனால் அவர்கள், ”கர்த்தர் உரைக்கிறதாவது“ என்று கூறப்படுவதை கேட்க விரும்புகின்றனர். அது வேலியைத் தாண்டி வருகிறது, ஏனெனில் அவள் கீழ்ப்படிந்தாள். அப்பொழுது வருத்தம் நீங்கினது. ''கர்த்தர் உரைக்கிறதாவது, கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மாவு செலவழிந்து போவதும் இல்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை.'' 45அவள் அப்பத்தை உண்டாக்கி தீர்க்கதரிசிக்குக் கொடுத்தாள். அவள் திரும்பிச் சென்று அவளுக்கும் அவளுடைய குமாரனுக்கும் அப்பம் உண்டாக்கினாள். அவர்கள் பூமியில் அபரிமிதமாக புசித்து குடித்தனர். அது எங்கிருந்து வந்தது? அது எப்படி அங்கு அடைந்தது? அந்த மாவு எங்கிருந்து வந்ததென்று விஞ்ஞானரீதியாக என்னிடம் கூறுங்கள். அந்த எண்ணெய் எங்கிருந்து வந்தது? அது எப்படி கலசத்தில் நுழைந்தது? அவள் ஒவ்வொரு காலையிலும் பானையிலிருந்த மாவை ஊற்றி அதை காலியாக்கினாள். அது காலியாயிருந்தது, ஆனால் அவள் அதிக மாவுக்காக திரும்பிச் சென்றபோது, அது அங்கிருந்தது. அது எங்கிருந்து வந்தது? தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள். தேவனைக் குறித்து நிச்சயமுடையவர்களாயிருங்கள். அவரே சிருஷ்டி கர்த்தர். நீ ஒருக்கால் உன் சுகத்தை இழந்திருக்கலாம். உன் ஐக்கியத்தை நீ இழந்திருக்கலாம். அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள். அவர் தேவனென்று உறுதிகொள். அவருடைய வார்த்தையை நீ ஏற்றுக்கொண்டு அவர் தேவனென்று நீ உறுதி கொள்வாயானால், அந்தகாரமாக காணப்படும் நேரம் அவ்வளவு அந்தகாரமாக காணப்படாது. 46ஒரு சமயம் ஜெர்மனியில் ஒரு ஓவியத்தைக் கண்டேன். அது என் இருதயத்தில் பதிந்துவிட்டது. ஒரு ஜெர்மானிய ஓவியர் அதை வரைந்தார். அது “மேகம் நாடு” (The Cloud Land) என்றழைக்கப்படுகின்றது. அதை நீங்கள் தூரத்திலிருந்து காண்பீர்களானால், அது மிகவும் பயங்கரமான மேகங்கள் சூழ்ந்த இருளாக உள்ளது. ஆனால் நீங்கள் அருகில் சென்று பார்த்தால், அது மாறிவிடுகிறது. ஒரு தேவ தூதன் தன் சிறகுகளை அடித்துக் கொண்டு கர்த்தருக்கு அல்லேலூயா பாடிக் கொண்டிருப்பதாக அது உள்ளது. சில சமங்களில் இருள் அவ்வாறேயுள்ளது. வெகு தூரத்திலிருந்து அதை நீங்கள் காணும் போது, அது மிகவும் இருளாகவும் அந்தகாரம் நிறைந்ததாகவும் உள்ளது. ஆனால் தேவனை அவருடைய வார்த்தையின் மூலம் ஏற்றுக் கொண்டு, அவர் தேவனென்று உறுதி கொண்டு, அதற்கருகே செல்லும் போது, தேவ தூதனுடைய சிறகுகள் அடித்துக் கொண்டிருப்பதாக உள்ளதை நீங்கள் காணலாம். 47இந்த விதவை சற்று ஆபிரகாமைப் போல் இருந்தாள். அதாவது அவளுக்கிருந்த அனைத்தையும் அவள் பலிபீடத்தின் மேல் வைக்கும்படி அழைக்கப்பட்டாள். ஒருக்கால் நீங்களும் இன்று காலை அவ்வாறு செய்ய அழைக்கப்படலாம். உங்கள் வழிகளை விட்டு விடுங்கள். உங்கள் அவ்விசுவாசத்தைக் கைவிடுங்கள்; உங்களுக்குள்ள அனைத்தையும் நீங்கள் கைவிட்டு, அதன் பிறகு எண்ணெயும், வார்த்தையும் எடுத்துக் கொண்டு ஒன்றாக கலந்து சுயதியாகம் என்னும் பலிபீடத்தின் மேல் வையுங்கள். அப்பொழுது, நான் பிரசங்க பீடத்தின் மேல் நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக அது தேவனை காட்சியில் கொண்டுவரும். 48நான் ஜெபம் செய்யும் போது, அதைக் குறித்து சிந்தனை செய்து பாருங்கள். இன்றைக்கு உங்களுக்கு தேவை ஏதாகிலும் உள்ளதா? உங்களால் சரீரப்பிரகாரமாக பெற்றுக்கொள்ள முடிவதைக் காட்டிலும் அதிகமான தேவை உள்ளதா; உங்களுக்கு வாடகை கொடுக்க முடியாத அளவுக்கு பணம் குறைவாக உள்ளதா? உங்கள் பிள்ளைகளுக்கு காலணிகள் அவசியமாயிருந்து, அதை வாங்கிக் கொடுக்க உங்களிடம் பணம் இல்லையா? உங்கள் வீட்டில் பானை காலியாகி, கலசமும் உலரும் நிலையில் உள்ளதா? உங்கள் கால் நடைகளுக்கு தீவனம் வாங்கி போஷிக்க முடியாதபடிக்கு கஷ்டம் உள்ளதா? அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார் என்பதை நினைவு கூருங்கள். நீங்கள் வியாதியாயிருந்து, உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவர் கூறி, அதற்கு உங்களிடம் பணம் இல்லையா? உங்களுக்குத் தேவை உள்ளது. 49நீ ஒரு பாவியா? உனக்கு இரட்சிப்பின் அவசியம் அதிகமாக உள்ளதா? இன்றைக்கு தேவன் உன்னை அழைப்பாரானால், நீ இழந்து போகும் நிலையில் இருக்கின்றாய் என்று உணருகிறாயா? நீ தேவனிடமிருந்து ஓடிச் சென்று பின் வாங்கிப்போன நிலையில் இருக்கிறாயா? ஒரு சபையைச் சேர்ந்து கொண்டு, அது வார்த்தையின்படி சரியல்லவென்று உன் சொந்த மனச்சாட்சி உன்னிடம் கூறி, உனக்கு தேவை ஒன்றுள்ளதா? இந்த வார்த்தைகள் முள்ளுள்ள இடங்களிலோ, கற்பாறைகளிலுள்ள இடங்களிலோ - கல்லான இருதங்களில் - விழும்படியாக விட்டுவிட வேண்டாம். அவை நல்ல, செழிப்பான நிலத்தில் விழட்டும். நீ வியாதியாயிருந்து, நீ சுகமடைய முடியாது என்று மருத்துவர்கள் கூறி, உன் வாழ்நாள் முழுவதும் அவரைச் சேவிப்பதாக நீ தேவனுக்கு வாக்களித்து, அவர் தேவனென்று நீ உறுதி கொண்டிருந்தால், அவருடைய தேவையை சந்திப்பாயாக, உனக்கு தேவை இருக்குமானால், உன் கரத்தை முதலாவதாக தேவனிடம் உயர்த்தி, உனக்குத் தேவை ஒன்றுண்டு என்று அறிவிப்பாயா? தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நாம் ஜெபம் செய்வோம். 50ஓ கர்த்தாவே, இன்று காலை நான் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக அக்கரங்கள் ஒன்றாகிலும் நீர் அறியாமல் உயர்த்தப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் நீர் தேவனாயிருக்கிறீர். நீர் “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவு விசேஷித்தவர்கள்?” என்று கூறியிருக்கிறீர் (மத்.10:29, 30). அந்த மானிடரின் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளதை நீர் எவ்வளவு விசேஷமாகக் காண்கிறீர்? இவர்களுக்காக உமது குமாரன் இயேசு கிறிஸ்து மரித்தாரே! இன்று காலை ஒரு அடைக்கலான் குருவி விழுவதை காண்பதைக் காட்டிலும் இவர்களுடைய கரங்களை நீர் எவ்வளவு விஷேசமாக காண்கிறீர்! இன்று காலை ஒரு டஜன் அடைக்கலான் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுமென்று நினைக்கிறேன். ஏனெனில் யாருக்கும் அவை அவசியமில்லை. அவைகளை சுமந்து கொண்டிருப்பது தொல்லையாகும். ஆனால் நீரோ அவை ஒவ்வொன்றையும் அறிந்திருக்கிறீர். அவைகளின் உடல்களிலுள்ள ஒவ்வொரு இறகையும் நீர் அறிந்திருக்கிறீர். எங்கள் தலையிலுள்ள ஒவ்வொரு மயிரையும் நீர் அறிந்திருக்கிறீர். ஓ கர்த்தாவே, ஜெபத்திற்கு பதிலளிப்பீராக; நீர் தேவனென்றும் அது உம்முடைய ஆவியென்றும் இன்று காலை அவர்கள் உறுதி கொள்வார்களாக, இந்நவீன கால மார்க்கத்தின் புத்தியீனமும், பகட்டும், “ஓ, நான் இன்னின்ன சபையைச் சேர்ந்திருக்கிறேன்” என்று அவர்கள் கூறுவதும், அவர்களை விட்டு எடுபடுவதாக. தேவனே, அது அவர்களுடைய சிந்தையிலிருந்து இப்பொழுதே மறைவதாக. இந்த ஒரு நொடிப்பொழுதில் அவர்கள் நித்திய ஜீவனின் காட்சியைக் கிரகித்து கொள்வார்களாக. அப்பொழுது அவர்கள் அதைத்தேடி அதற்காக பசி கொண்டு, தேவன் எப்படிப்பட்டவர் என்று அறிந்து, அவர் உண்டென்றும், அவர் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார் என்றும் உறுதி கொள்வார்கள். 51பாவிகள் சீக்கிரமாக மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்துக்கு ஆயத்தமாகட்டும். அப்பொழுது பரிசுத்த ஆவியைத் தருவதாக நீர் வாக்கருளியிருக்கிறீர். கர்த்தாவே, நீர் அவ்வாறு கூறியுள்ளீர். உமது வாக்குத்தத்தததை நீர் நிறைவேற்றுகிறவராயிருக்கிறீர். நீர் தேவனென்று நிச்சயம் கொண்ட பின்வாங்கிப் போனவர் இருக்கக்கூடும். அவர்கள் உம்மை விட்டு அலைந்து திரிந்தனர். அவர்கள் இன்று வருவார்களாக. ஏனெனில் நீர், “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்'' என்று கூறியிருக்கிறீர். (ஏசா.1:18). இங்கு வியாதிப்பட்டோர் இருப்பார்களானால், நீர் தேவனென்று அவர்கள் உணருவார்களாக, நீர் உம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறவராயிருக்கிறீர். நீர் உம்முடைய வார்த்தையை நிறைவேற்றியே ஆக வேண்டும். அவர்கள் தங்கள் எண்ணெயுடன் தங்களை கிடத்தம் இந்நேரத்தில், அவர்களுக்குள்ள ஆவி அவர்கள் விசுவாசிப்பதாக அறிக்கை செய்யும் இந்நேரத்தில்; அதனுடன் கூட புறப்பட்டு சென்ற ஜீவ அப்பமாகிய வார்த்தையையும் அவர்கள் சமர்ப்பிக்கும் போது; பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் கிறிஸ்து அவர்களுக்காக அரைக்கப்பட்டு, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று காண்பிக்கிறார். அவர்கள் வார்த்தையையும் அவர்களிடமுள்ள எண்ணெயாகிய ஆவியையும் ஒன்று கலந்து, பீடத்தினருகில் நின்று, “கர்த்தாவே, இவ்வளவு தான் என்னிடம் உள்ளது, அதை கொண்டு வருகிறேன்'' என்று கூறுவார்களாக. ஓ, அப்பொழுது நீர் எவ்வளவாக அதை அதிகரித்து தருவீர்! அப்பொழுது சரித்திரப் பிரகாரமாகிய தேவனை அது காட்சியில் கொண்டு வரும். அது எவ்வளவாக யேகோவாவின் இருதயத்தைப் பூரிக்கச் செய்து, ''எனக்குக் கீழ்ப்படியும் ஒரு பிள்ளை இருக்கிறான். அவனை நான் சோதனைக்குட்படுத்தினேன். அவனோ என்னை நேசிப்பதாகவும் என்னை விசுவாசிப்பதாகவும் நிரூபித்து விட்டான். நான் உண்டென்று அவன் நிச்சயமுடையவனாயிருக்கிறான்” என்று கூறச்செய்யும். ஏனெனில், “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. (எபி.11:6). அதை நாங்கள் உம்மிடம் சமர்ப்பிக்கும் இந்நேரத்தில் அதை அருள்வீராக. 52நமது தலைகளை வணங்கியிருக்கும் இந்நேரத்தில், யாருக்காகிலும் தேவை இருக்குமானால், இப்பொழுது எழுந்து நிற்பீர்களா?... அவர் தேவனென்று நீங்கள் உறுதி கொள்ளாமலிருந்தால்.... அவர் தேவனென்றும், இரட்சிப்பு, சுகமளித்தல் எதுவாயிருப்பினும் அவர் தமது வார்த்தையை நிறைவேற்றுவார் என்றும் நீங்கள் உறுதி கொண்டிருந்தால், அவர் தேவனென்று நீங்கள் நிச்சயமுடையவர்களாயிருந்தால், எழுந்து நில்லுங்கள், யாருக்காகிலும் ஜெபம் ஏறெடுக்கப்பட்ட நீங்கள் விரும்பினால், அவர் தேவனென்று நீங்கள் நிச்சயமுடையவர்களாயிருந்தால், எழுந்து நில்லுங்கள், உங்கள் விண்ணப்பங்களை பரிசுத்தவான்களுடைய சபையில் தெரியப்படுத்துங்கள். நீங்கள் நின்று கொண்டிருக்கும் நேரத்தில் அதை செய்கிறீர்கள்... (ஒலி நாடவில் காலியிடம்) அவர் தேவன் என்பதில் நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அவர் தன்னுடைய வார்த்தையை காத்துக் கொள்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும் நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன் என்னுடைய வேண்டுகோலானது… அதை நான் இப்பொழுது இரத்தத்தின் கீழாக வைக்கிறேன். அப்படி நீங்கள் செய்வீர்களானால், ஒவ்வொரு பாவத்தையும், ஒவ்வொரு... கீழாக வைத்து விடுங்கள். பாவம் என்பது அவிசுவாசமாயிருக்கிறது. பாவம் என்பது அவ்விசுவாசம், நீங்கள் சபை அங்கத்தினராய் இருக்கலாம், ஆனால் நான் குறிப்பிடுவது பாவம், உங்கள் அவ்விசுவாசத்தை. அதை நீங்கள் பலியாக கிடத்துகின்றீர்கள். அதை நீங்கள் பலி செலுத்தப் போகின்றீர்கள், நீங்கள் சிலுவையண்டை வருகின்றீர்கள். உங்கள் அவ்விசுவாசம் அனைத்தையும் நீங்கள் பலியாக செலுத்தி அதை அவரிடம் சமர்ப்பித்து, அவர் உண்டென்றும், அவர் பதிலளிப்பாரென்றும், நிச்சயமுடையவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் அப்படி இருப்பீர்களானால் உங்கள் கரங்களையுயர்த்துங்கள். அதே விதமாக இருங்கள். 53கர்த்தாவே, நீரே தேவன். அவர்களுடைய எண்ணெயும் தானியமும் ஒன்று கலந்து இதோ உள்ளது. அவர்கள் அதை சிலுவையண்டையில் கொண்டு வருகின்றனர்; அங்கு தேவனுடைய அக்கினி அவர்களுடைய இருதயங்களில் விழுந்து - அவர்கள் உண்மையாக வருவார்களானால் - அவர்களுடைய பலியை அது சுட்டெரிக்கும். நீர் காட்சியில் வந்து, தண்ணீர்களை எழுப்புவீர். நீர் பரலோகத்திலிருந்து அக்கினிரதத்தில் வந்து வானத்தையும் பூமியையும் அசைத்து அவர்களுக்குப் பலனளிப்பிர். அவர்கள் விசுவாசிக்கின்றனர் என்பதனை அறிகுறியாக தங்கள் கரங்களை மேலேயுயர்த்தி, தங்களையும் தங்கள் விண்ணப்பங்கள் அனைத்தையும் உம்முடைய பலிபீடத்தின் மேல் கிடத்தி, நின்று கொண்டிருக்கும் இந்நேரத்தில்... ஓ, வானத்துக்கும் பூமிக்கும் தேவனே, வானத்துக்கும் பூமிக்கும் நியாயாதிபதியே; நிச்சயமாக வானத்துக்கும் பூமிக்கும் நியாயாதிபதி நீதியை அருளுவார். நிச்சயமாக அவர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவர் - ஆண்கள், பெண்கள் அவர்களுடைய இருதயங்களிலுள்ளவைகளை அறிந்திருப்பவராகிய நீர். 54தேவனாகிய கர்த்தாவே, என் கரங்களையும் நான் உயர்த்துகிறேன். ஏனெனில் இப்பொழுது என் ஊழியத்தில் ஒரு மாறுதல் ஏற்படப்போகிறது என்பதை அறிவேன். நீர் உண்டென்று நான் விசுவாசிக்கிறேன். நீர் அக்கினி ஸ்தம்பத்தில் நின்று கொண்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். நீர் மனிதருடைய இருதயங்களிலுள்ள இரகசியங்களை ஆராய்வதை நான் கண்டிருக்கிறேன். ஒருமுறை கூட நீர் தவறினதில்லை. இங்குள்ள இத்தெருவில் நீர் அதை வாக்களித்தீர். அப்பொழுது முதலாவதாக இந்த காரியங்களைச் செய்ய ஆரம்பித்தீர். உலகம் முழுவதிலும் அநேகமுறை நீர் என்னைப் பாதுகாத்து வந்தீர். நீர் தேவனென்று நான் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்; அதைக் குறித்து நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். கர்த்தாவே, இந்த ஜனங்களுடன் கூட என்னையும் எனக்குள்ள எல்லாவற்றையும் நான் பலியாகப் படைக்கிறேன். கர்த்தாவே, நான் மறுபடியுமாக உலகத்தை சுற்றப் புறப்படுகிறேன். ஓ, தேவனே, எனக்குதவி செய்யும், நான் எப்பொழுதாவது உம்மை அவிசுவாசித்திருந்தால், என் பாவத்தை எனக்கு மன்னித்தருளும். என் அவிசுவாசத்தை எனக்கு மன்னித்தருளும் நீர் உண்டென்றும் உம்மைத் தேடுகிறவர்களுக்கு நீர் பலனளிக்கிறவரென்றும் நான் விசுவாசிக்கிறேன். 55அதுபோன்று, இன்று காலை என் ஜனங்கள் கைகளையுயர்த்தியிருக்கும் போது, அவர்களுடைய பாவங்களையும், அவர்களுடைய பலவீனங்களையும், அவர்களுடைய சந்தேகத்தையும் நான் அறிக்கை செய்கிறேன். கர்த்தாவே, அவர்களுடைய பாவங்களையும், எங்கள் பலவீனங்கள் அனைத்தையும் நான் அறிக்கை செய்கிறேன். நீர் தேவனென்றும், எங்களை ஏற்றுக்கொண்டு, உமது கரங்களில் எங்களை அணைத்துக் கொண்டு, நாங்கள் இழந்து போன எல்லாவற்றையும் எங்களுக்கு மீட்டுத்தர நீர் இப்பொழுது இங்கிருக்கிறீர் என்னும் ஆமோதத்தின் முத்திரையுடன் உம்முடைய பரிசுத்த ஆவியை எங்கள் மேல் அனுப்புவீராக. எங்கள் சுகத்தை நாங்கள் இழந்திருப்போமானால், அது நூறத்தனையாகத் திரும்பத் தரப்படட்டும். அது எங்கள் ஆத்துமாவாயிருக்குமானால், அது தேவனுடைய சமூகத்தில் படைக்கப்படுவதற்கென, அழகான பிரகாசமான பாத்திரத்தில் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டதாய், எங்களிடம் வருவதாக. அது அவிசுவாசமாயிருக்குமானால், கர்த்தாவே, மலைகளைப் பெயர்க்கத்தக்க விசுவாசம் எங்களிடம் வருவதாக. கர்த்தாவே, அதை அருளும். கர்த்தாவே, நீர் பரிசுத்த ஆவியாக இந்தக் கட்டிடத்தில் மிகுதியாக அசைவாடி, ஜனங்கள் ஜீவனுள்ள தேவனை ஏற்றுக் கொள்வதற்கென அவர்கள் மேலும், அவர்கள் இருதயங்களிலும் அசைவாடுகின்றீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இதை நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறோம். 56என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது, கல்வாரியின் ஆட்டுக் குட்டியே, திவ்விய இரட்சகரே! நான் ஜெபிக்கும் போது எனக்கு செவிகொடும், என் பாவங்கள் அனைத்தும் போக்கும். உம்மிடமிருந்து எப்பொழுதும் வழி விலகாதபடி, என்னைக் காத்துக் கொள்ளும். அதை நீங்கள் உண்மையான அர்த்தத்தில் கூறுகின்றீர்களா? அதை நீங்கள் பெற்றுக் கொள்கின்றீர்களா? அப்படியானால் உங்கள் கரங்களையுயர்த்தி, “அவரிடமிருந்து நான் பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறுங்கள். வாழ்க்கையின் இருண்ட சிக்கலான பாதையில் நான் நடந்து, என்னைச் சுற்றிலும் துயரங்கள் சூழும் போது, நீரே என் வழிகாட்டியாய் இரும். இருள் வெளிச்சமாக மாறக் கட்டளையிடும், துன்பத்தின் பயங்களைத் துடைத்து நீக்கும், உம்மிடமிருந்து எப்பொழுதும் வழிவிலகாதபடி, என்னைக் காத்து கொள்ளும். 57நாம் தலை வணங்குவோம். இந்த கடுமையான, கடுமையாக வெட்டும் செய்திக்குப் பின்பு; அது முரடாயும், முரடான வழியிலும் அளிக்கப்பட்டது. ஆனால் அது உண்மை.... நீங்கள் கேட்டதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நீங்கள் தாழ்மையுடன் விசுவாசித்தால், அந்த நேர் வழியிலிருந்து உங்களை எதுவும் தள்ளிவிட நீங்கள் அனுமதிக்க வேண்டாம். நான் எவ்வளவு தான் பிரசங்கித்தாலும், நான் என்ன செய்தாலும், அல்லது வேறு மனிதன் என்ன செய்தபோதிலும், நீங்கள் அதை உங்கள் சொந்த சொத்தாக ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் அது பயன்தராது. நீங்கள் அதை முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நீங்கள் விரும்பும் அனைத்துமே... உங்கள் பாவங்களை நீங்கள் அறிக்கையிட்டால், தேவன் உங்களை மன்னிப்பார். அதை நீங்கள் இனி ஒருபோதும் சந்தேகிக்க வேண்டாம். நீங்கள் பின் வாங்கிப் போனவர்களாய் இருந்தால், இன்று காலை நீங்கள் திரும்ப ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டீர்கள். உங்ளுக்கு பரிசுத்த ஆவி அவசியமானால், உங்கள் பாவ மன்னிப்புப்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அது தேவனுடைய வார்த்தை. அவர் எந்த சபைக்காகவும், ஸ்தாபனத்துக்காகவும், வேறு யாருக்காகவும் அதை மாற்றமாட்டார். அது அந்த விதமாகவே பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவருடைய தேவைகளை நாம் சந்திக்க வேண்டுமேயன்றி, ஸ்தாபனத்தின் தேவைகளையல்ல. அதை தான் நாம் செய்ய வேண்டியவர்காளயிருக்கிறோம். 58விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் என்று அவர் கூறியிருந்தால்... நான் உங்களுக்கு விசுவாசமுள்ள ஜெபத்தை ஜெபித்து விட்டேன். நீங்கள் அதை உங்கள் இருதயத்தில் ஜெபித்து, அதை விசுவாசித்து, அதை ஏற்றுக் கொண்டு, அதில் உறுதியாய் நிற்கிறீர்கள், எனவே அது அவ்வாறே நடக்க வேண்டும். எதுவும் அதை எடுத்துக் கொள்ள முடியாது. அது எவ்வளவு அந்தகாரமாக காணப்பட்டாலும் பரவாயில்லை. நீங்கள், “நான் இன்னும் வியாதியாயுள்ளது போலிருக்கிறது” எனலாம். அது அப்படி இல்லை. அது தேவ தூதனின் சிறகுகள் ஒன்றாக சேர்க்கப்பட்டவையே, அவ்வளவு தான். அது ஆசிர்வாதத்தின் வடிவில் தேவனாகும். அது உங்களுக்கு அந்தகாரமாகத் தோன்றுகிறது. அதற்கு இன்னும் அருகில் சென்று அதை மறுபடியும் பாருங்கள். அது தேவன் அங்கு நின்று கொண்டு அவருடைய வார்த்தையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் காட்சியல்லவா என்பதைப் பாருங்கள். நாம் தலை வணங்கியிருக்கும் இந்நேரத்தில், நமது போதகராகிய சகோ. நெவில்லிடம் ஆராதனையை ஒப்படைக்கப் போகின்றேன்.